சென்னை:
2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழ்நாடு அரசின் தற்காலிக நிதிநிலை அறிக்கையை முதன்மைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, தவெக அரசுக்கு ரூ. 30,021 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கியப் புள்ளிவிவரங்கள்:
-
மொத்த வருவாய் (ரூ. 1.17 லட்சம் கோடி): நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் 34.18 சதவீதமான ரூ. 1,17,790.89 கோடியை அரசு வருவாயாக ஈட்டியுள்ளது.
-
மாநில ஜிஎஸ்டி: ரூ. 34,144 கோடி
-
விற்பனை / வணிக வரி: ரூ. 28,164 கோடி
-
மத்திய அரசின் வரிப் பகிர்வு: ரூ. 24,188 கோடி
-
முத்திரைத்தாள் & பத்திரப் பதிவு: ரூ. 10,493 கோடி
-
-
மொத்த செலவினம் (ரூ. 1.47 லட்சம் கோடி): ஆகஸ்ட் இறுதி வரை அரசு மொத்தம் ரூ. 1,47,839.35 கோடியைச் செலவிட்டுள்ளது.
-
வாங்கிய கடன்களுக்கான வட்டி: ரூ. 25,991 கோடி
-
ஓய்வூதியம்: ரூ. 21,008 கோடி
-
கட்டமைப்பு மற்றும் புதிய வளர்ச்சிப் பணிகள்: ரூ. 9,699 கோடி
-
-
அரசு உத்தரவாதங்கள் (Guarantees): அரசுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்காகத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உத்தரவாதங்களின் மொத்த நிலுவை மதிப்பு ரூ. 1,86,454 கோடியாக உள்ளது. இதில் பெரும்பகுதியாக மின் பகிர்மானக் கழகத்துக்கு (TANGEDCO) ரூ. 93,733 கோடியும், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 49,145 கோடியும் உத்தரவாதமாக வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆளும் தவெக அரசின் விளம்பரச் செலவுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், புதிய திட்டங்களுக்கான செலவை (ரூ. 9,699 கோடி) விட, கடன்களுக்கான வட்டிச் செலவு (ரூ. 25,991 கோடி) இருமடங்கு அதிகமாக உள்ளதாக வெளியாகியுள்ள இந்த அறிக்கை அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
Hashtags:
#TNFinance #FiscalDeficit #TVKGovt #TNEB #TNPolitics #TamilNaduNews #BreakingNewsTamil