ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இலங்கை இராணுவத்தின் 26வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாகப் பதவியேற்கிறார்.
இந்தப் பதவியை ஏற்குமுன், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இராணுவத் தலைமைச் செயலதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சேவையாற்றியுள்ளார்.
இலங்கை பீரங்கிப் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான இவர், தனது இராணுவ சேவைக் காலத்தில் பல்வேறு முக்கிய கட்டளை மற்றும் தளப் பதவிகளை வகித்துள்ளார்.