232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த 20 மாத காலப்பகுதியில் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், சிவப்பு அறிவித்தல் இல்லாமலேயே மேலும் 35 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, இதுவரை 58 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள மேலும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாகவும், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, மலேசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, ரஷ்யா, இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் வௌிப்படுத்தினார்.

சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் 23 பேர் சிவப்பு அறிவித்தல் மூலம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். சிவப்பு அறிவித்தல் இன்றி மேலும் 35 பேர் என மொத்தம் 58 பேர் கடந்த 20 மாதங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 232 பேருக்கு சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள். அந்த 96 பேரில் 37 பேர் வெளிநாடுகளில் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 பேர், இந்தியாவில் 11, மலேசியாவில் 1, ஐக்கிய இராச்சியத்தில் 1, பிரான்சில் 1, கனடாவில் 1, ரஷ்யாவில் 1, இத்தாலியில் 1 மற்றும் சவுதி அரேபியாவில் 1 என 37 பேர் இனங்காணப்பட்டு, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு அழைத்து வருவோம். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துகொண்டுதான் இவர்கள் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்துகின்றனர்.

எனவே அந்த ஒருங்கிணைப்பாளர்களைக் கைது செய்ய வேண்டும். அதேபோல, இவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டிற்குள் இருக்கும் இவர்களின் சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.

6

வைகோவுடன் மோதல்- திமுகவில் இணையும் 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

June 27, 2026

‘சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கொள்கை மோதல்கள் முற்றிப்போய், இன்று இரு எம்.எல்.ஏ.க்கள் திமுகவில்

canada policee aaa

டார்ட்மவுத் (Dartmouth) பகுதியில் துப்பாக்கிச் சூடு: 39 வயது நபர் பலி

June 27, 2026

டார்ட்மவுத் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினர்

GMJMLNA2EXY7FESC4EYUSQW72Q

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் விபத்து: ஒருவர் காயம், தப்பியோடிய இரு சந்தேகநபர்களைத் தேடும் காவல்துறை

June 27, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளான

MGI7KLC6XNFF7BPVXHBN5K6LFM

பிராம்ப்டனில் மோதிவிட்டு தப்பிய வாகனம்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

June 27, 2026

கனடா, பிராம்ப்டன் (Brampton) நகரில் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற ‘மோதிவிட்டு தப்பியோடிய’ (Hit-and-run) வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள்

729375397_1246220910798013_4024349540228563499_n

கொலைக் குற்றச்சாட்டில் தேடப்படும் நபர் டொராண்டோவின் ‘ஹை பார்க்’ (High Park) அருகேகாணப்பட்டுள்ளார்

June 27, 2026

இரட்டைக் கொலைச் சம்பவம் (Double homicide) தொடர்பாக கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் ஜோர்டான்

4

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? – அன்புமணி ராமதாஸ்

June 27, 2026

‘சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகள்

3

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக: பொதுக்குழுவில் நிறைவேறியது தீர்மானம்

June 27, 2026

‘சென்னை: சுமார் 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்

2

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

June 27, 2026

‘சென்னை: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

photo-collage.png

5000 கலைஞர்களின் பரதநாட்டிய கின்னஸ் சாதனை முற்சியில் பண மோசடி; அமைச்சர் மீது முறைப்பாடு!

June 27, 2026

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண

muk

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

June 27, 2026

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய

suresh11

சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதி

June 27, 2026

அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய

deng

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

June 27, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய