அனோஜன் மரண தண்டனைச் சிறைக்கு மாற்றப்பட்டார்!

வுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுப் பலத்த காவலுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இன்னும் மூன்று வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனிடம் சவூதி அரேபிய அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுவாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளின் கைகளையும் கால்களையும் கனமான இரும்புச் சங்கிலியால் பிணைத்தே சவுதி சிறையில், இருட்டறைகளில் வைத்திருப்பார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு […]
உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம்

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய […]
நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!

ஏர்பஸ் (Airbus) வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ரூ. 500,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 30 மில்லியன் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் ராஜபக்ஷவை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டார். மேலும், ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்த நீதிமன்றம், கட்டுப்பாடு தொடர்பான தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறு […]
விமானிகளுக்கு இடையே மோதல் – துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானம் ஒன்றில், உதவி விமானிகளுக்கு (co-pilots) இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த விமானம் சவூதி அரேபியாவில் தரையிறங்கியுள்ளது. விமானப் பணியாளர்கள் உதவி கேட்டதாகவும், பயணிகள் இணைந்து ஒரு விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டியதாகவும் அதிலிருந்த இஸ்ரேலியப் பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை அதிகாலை புறப்பட்ட ஃபிளைதுபாய் (Flydubai) விமானம், பயணம் தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் அவசரநிலை சிக்னலை (emergency code) அனுப்பியதாக ‘ஃபிளைட்ரேடார்24’ (Flightradar24) கண்காணிப்பு […]
பண்டைத் தமிழர் நாகரிகத்தின் தொல்பொருள் சான்றுகளைக்கொண்ட வெடுக்குநாறிமலையும் பறிபோகிறதா

: நடராஜர் காண்டீபன் கடந்த 2026 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நான் வெடுக்குநாறி மலைக்குச் சென்றிருந்தேன். அந்த மலையிலும் அந்த மலையடி வாரத்திலும் இருக்கும் சான்றுகள் அனைத்துமே தமிழரின் பண்டைய நாகரிகத்தை நிரூபித்து நிற்கும் நாகர்காலத்துக்கு உரியவை என்பதனை நான் ஒரு காணொளி மூலமாக சுட்டிக் காட்டியிருந்தேன். இப்போது சிங்கள பௌத்த பேரினவாதிகள், குறித்த எனது காணொளியை காவிக்கொண்டு நான் வரலாற்றை புனைவதாகவும் திரிபுபடுத்துவதாகவும் கூவிக்கொண்டு திரிகிறார்கள். பண்டைத் தமிழன் பண்பாட்டோடு பிணைந்திருந்த குருந்தூர் […]
மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

மட்டக்களப்பு, மயிலத்தமடு-மாதவனைப் பகுதியில் பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, நாட்டில் இன மோதல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹந்துன்னெத்தி, மாவட்டத்தில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் பல நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிலையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். […]
கிரிஷ் திட்டத்தில் சட்டவிரோத நிதி பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல்: நீதிமன்றத்தில் செய்தி

கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான நிலத்தை ‘கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு’ (Krish Transworks Colombo) நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு வசதியாக, நிமல் பெரேரா என்பவர் மூலமாக நாமல் ராஜபக்ஷ ரூ. 70 மில்லியன் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் அம விஜேசிங்க நீதிமன்றத்தில் […]
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்

புதிதாக வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார அறிக்கையில் வறுமை மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பழைய மற்றும் காலாவதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் திருத்தப்பட்ட புதிய அறிக்கையை வெளியிடுமாறு கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி மற்றும் தொகையியல் புள்ளிவிவரத் திணைக்களம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், வீட்டு வருமானம், செலவீனம், வறுமை, மற்றும் வசிப்பிடம் தொடர்பான […]
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள் போல ஞானசாரதேரரை பாதுகாக்கின்றது – காமினி வியாங்கொட

நீதிமன்றம் பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் காமினிவியாங்கொட கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது முன்னைய அரசாங்கங்கள் போல அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கமும் ஞானசார தேரருக்கு சார்பான விதத்தில செயற்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்த பின்னர் துரிதமாக செயற்படாமை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெட்கப்படவேண்டும். ஞானசார […]
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவோருக்கு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவது குறித்து மக்கள் கவனமாக இருக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பணமாக்கல் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டதால், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் கூறுகின்றது. மேலும், குழந்தைகளின் […]