தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஏனைய அரசாங்கங்கள் போல ஞானசாரதேரரை பாதுகாக்கின்றது – காமினி வியாங்கொட

நீதிமன்றம் பொதுமன்னிப்பை இரத்து செய்த பின்னர் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் காமினிவியாங்கொட கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது முன்னைய அரசாங்கங்கள் போல அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கமும் ஞானசார தேரருக்கு சார்பான விதத்தில செயற்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்த பின்னர் துரிதமாக செயற்படாமை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெட்கப்படவேண்டும். ஞானசார […]
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவோருக்கு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவது குறித்து மக்கள் கவனமாக இருக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பணமாக்கல் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டதால், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் கூறுகின்றது. மேலும், குழந்தைகளின் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் E-gate எனப்படும் தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ள 4 தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களுக்கு மேலதிகமாக, மேலும் 8 வாயில்கள் உட்பட மொத்தம் 12 தானியங்கிப் பயணிகள் அனுமதி வாயில்கள் அமைக்கப்படவுள்ளது. அதற்கு, முறையான கொள்முதல் முறையைப் பின்பற்றி கொள்வனவு செய்து நிறுவும் பணிகளை தொடங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற […]
மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச!

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றைய நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்துள்ளது. இதற்கமைய நாமல் ராஜபக்ச இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை […]
வெள்ளவத்தையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!

கொழும்பு, வெள்ளவத்தை கவிரத்ன பிரதேசத்தில் வசிக்கும் பெண் சட்டத்தரணியின் மாடி வீட்டிற்குள் நுழைந்து, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்கம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தைத் திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் 5 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர், நாட்டின் பதிவு செய்யப்பட்ட பல குற்றங்களுக்கு தொடர்புடைய வெள்ளவத்தை உபயா என அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் […]
அரச நிறுவனங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரிதம்!

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசு நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு” தொடர்பில் […]
பிரபல உணவக வடையில் வெட்டுக்கிளி!

மன்னார், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்ட வேளையில் வடையுடன் வெட்டுக்கிளி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பி துண்டு காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், […]
நீதியான வரிக் கொள்கை அவசியம்

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மொத்த அரச வரி வருவாய்க்கு எவ்வித பாதகமான தாக்கமும் ஏற்படாத வகையில், வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் பல தொழிநுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைத் தமது சங்கம் சமர்ப்பித்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் […]
போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது

8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது. அவர் ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருளுடன் கட்டாரின் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானத்தின் மூலம் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் […]