பண்டைத் தமிழர் நாகரிகத்தின் தொல்பொருள் சான்றுகளைக்கொண்ட வெடுக்குநாறிமலையும் பறிபோகிறதா

: நடராஜர் காண்டீபன்
கடந்த 2026 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நான் வெடுக்குநாறி மலைக்குச் சென்றிருந்தேன். அந்த மலையிலும் அந்த மலையடி வாரத்திலும் இருக்கும் சான்றுகள் அனைத்துமே தமிழரின் பண்டைய நாகரிகத்தை நிரூபித்து நிற்கும் நாகர்காலத்துக்கு உரியவை என்பதனை நான் ஒரு காணொளி மூலமாக சுட்டிக் காட்டியிருந்தேன்.
இப்போது சிங்கள பௌத்த பேரினவாதிகள், குறித்த எனது காணொளியை காவிக்கொண்டு நான் வரலாற்றை புனைவதாகவும் திரிபுபடுத்துவதாகவும் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.
பண்டைத் தமிழன் பண்பாட்டோடு பிணைந்திருந்த குருந்தூர் மலைக்கு என்ன நடந்தது?
வவுனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தை ‘போகஸ்வவ’ என பெயர் மாற்றம் செய்து உருமாற்றம் செய்து ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு இப்போது வெடுக்குநாறிமலையின் வரலாற்றையும் மாற்றி போலியான வரலாற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது.
தமிழ் தேசியப் பற்றாளர்களே! தமிழின உணர்வாளர்களே! தமிழ் துறை பேராசிரியர்களே! தமிழ் புத்திஜீவிகளே! பல்கலைக்கழக மாணவர்களே! புலம்பெயர் தேசத்து தாய்த் தமிழ் உறவுகளே! தமிழ் மக்களின் பிரதி நிதிகளே!
அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அவசரமாக கலந்துரையாடுங்கள்.
தொல்பொருள் சான்றாதாரங்களுடன் செழிப்பான ஆதித் தமிழர் வரலாற்றைக் கொண்டிருக்கும் வெடுக்குநாறி மலையையும் நாங்கள் பறிகொடுக்கப் போகின்றோமா?
வெடுக்குநாறிமலையின் ஆதிகால வரலாற்றை சற்றே படியுங்கள்.
” இலங்கையில் நாகரும் தமிழர் சமுதாயமும்” எனும் தனது நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் “வன்னியில் பெருங்கற்கால பண்பாடு – நாகரும் தமிழும்” எனும் தலைப்பின் கீழான கட்டுரையில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஆதி வரலாற்று காலத்தில் நெடுங்கேணி ஒரு வேள்புலத்தின் மையப் பகுதியாக அமைந்திருந்தது என்று கொள்வதற்கான சான்றுகள் உண்டு….. அங்கு காணப்படும் பிரதான உருப்படி, பாம்பின் வளைவு போலான, 42 அடி நீளமான பிரமாண்டமான கல்லாகும். இதனைப் போன்ற வடிவங்களைக் கொண்ட உருப்படி இலங்கையில் வேறு எங்கும் காணப்படவில்லை. நிலத்தில் அமைந்திருந்த பெருங்கற்பாறையினை தேவைக்கேற்ப வெட்டியதன் மூலம் இதன் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.” ( பக்கம் 30 – இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
“…. அதற்குப் பின்புறத்திலே தென்கிழக்கு திசையில் ஒரு நாகலிங்க வடிவம் தெரிகின்றது. சிவலிங்கத்தின் மேலே ஐந்து தலை நாக வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இந் நாட்களிலும் அங்குள்ளவர்கள் அதற்கு சந்தனம் வைத்து மலர் சொரிந்து😂 வழிபடுகின்றனர். இந்தச் சிற்பம் ஆதியில் கோட்டம் ஒன்றின் மூலவராக இருந்திருக்கலாம். ” ( பக்கம் 31 – இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
மேலும் பேராசிரியர் பத்மநாதனுடைய ‘Tamil Inscriptions in Sri Lanka”
எனும் புத்தகத்தின் அத்தியாயம் 5 இல் “Tamil – Brahmi Inscriptions from Vetukkunarimalai’ எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
“There are two other places on the rock where inscriptions in Tamil Brahmi characters are found. At the center of one of these places is deep and circular cavity excavated on the rock. The size and depth of the cavity suggests that it was used for conserving water. As it is surrounded by inscriptions it may, perhaps, be assumed that it was used for the performance of some rituals connected with Naga cult…. (At page 96 – copy annexed)
The text reads:
Vel nakan making vel kannan
Vel kannan makan vel nakan
(வேள் நாகன் மகன் வேள் கண்ணன் வேள் கண்ணன் மகன் வேள் நாகன்)
…..
The large image of the Sivalinga, two Naga sculptures and a stone block resembling a huge free standing rectangular of an unusual form and bearing inscriptions on its surface are among the principal archaeological monuments at the site. The name ‘maninakan’ is found engraved on the Naga stones. ” (At page 97- copy anneced)
மேலும் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது ” Demala Baudhdhaya” – “தெமழ பௌத்தயா” (“தமிழ் பௌத்தன்”) எனும் சிங்களத்தில் எழுதப்பட்ட நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: (பக்கம் 224/225 – இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
” පාලි වංශ කතාවල සඳහන් වන නාග ගෝත්‍රිකයන් බුදු සමය වැළඳ ගැනීම පිළිබඳ නව අර්ථකතනයක් සැපයීමෙන් දෙමළ බුදු සමයෙහි ඉතිහාසයට නව එළියක් පතිත වන්නේය.
නාගදීපයට සහ කැලණියට බුදුන් වැඩියේ ඉලංකෛහි සිංහල රජය පිහිටුවන්ට පෙර ය. ඒ වන විට නාගදීප හෙවත් නාග නාඩු හි නාග ගෝත්‍රිකයන් කතා කළේ දෙමළ ය. එසේ නම් කැලණියේ නාගයන්ගේ භාෂාව ද දෙමළ විය යුතු ය . එසේ නම් එදා ඉලංකෛහි පහළ වූයේ දෙමළ බුද්ධාගම යි. මේ දෙමළ බුද්ධාගම පසුකාලයේ දී මිහිඳු හිමියන් හඳුන්වා දුන් බුද්ධාගම සමග මිශ්‍ර වන්ට ඇත.”
பிரித்தெடுக்கப்பட்ட குறித்த பந்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.
“பாளி வம்ச கதைகளில் குறிப்பிடப்படும் நாக கோத்திரத்தவர்கள் புத்த சமயத்தை பின்பற்ற தொடங்கியது தொடர்பான தகவலுக்கு புதிய பொருள்கோடலை செய்வதன் மூலமாக தமிழ் பௌத்த சமய வரலாற்றுக்கு புதிய ஒளி பாய்ச்சப்படுகிறது.
நாகதீபம் மற்றும் களனிக்கு புத்தபெருமானின் வருகையானது இலங்கையில் சிங்கள அரசு உருவாக்கப்படுவதற்கு
முன்பானதாகும். அக்காலப் பகுதியில் நாகதீபம் அல்லது நாகநாட்டில் நாக கோத்திரத்தின் பேச்சுமொழி தமிழ் ஆகும். அப்படியானால் களனியில். ..(பக்கம் -224)…. இருந்த நாகர்களது மொழியும் தமிழாய் இருந்திருக்க வேண்டும். அப்படியானால் அன்றைய காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தது தமிழ் பௌத்தம் ஆகும். இந்தத் தமிழ் பௌத்தமே பிற்காலப் பகுதியில் ‘மிகுந்து’ பிக்குவால் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள பௌத்தத்தோடு கலப்படைந்து இருக்க வேண்டும். (பக்கம் -225)”
சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் காவுகொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் வெடுக்குநாறி வெறும் நிலம் அல்ல? தமிழ் இனத்தின் மொழி பண்பாடு இருப்பு என அனைத்தையும் தாங்கி நிற்கும் என் தாய் நிலம்.
இந்த நிலத்திற்காகத் தானே ஒரு சந்ததியையே நாங்கள் இழந்து நிற்கிறோம். இனிவரும் சந்ததிக்காய் எங்கள் தாய் நிலத்தில் நாங்கள் எழுந்து நிற்போம் வாருங்கள்.
வெடுக்குநாறி மலை என் வரலாறு! என் பண்பாடு! என் மொழி! என் இனத்தின் எல்லா அடையாளங்களையும் தாங்கி நிற்கும் என் தாய் நிலம் .
தமிழராய் ஒன்றாவோம்! தாய் நிலத்தை வென்றாவோம்!
‘வரலாறு எனது வழிகாட்டி” – மேதகு
வரலாற்றைப் படி! வரலாற்றைப் படை
_119575072_d1e4b29a-9d6c-4cbf-86cf-8bccb955651f.jpg

“மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?” – அகற்றுதல் நடவடிக்கைகளுக்கு எதிராகச் சீமான் சரமாரிக் கேள்வி!

September 30, 2026

சென்னை: நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறி அரசு அகற்றி

maalai-malar_2026-09-29_9mxmvooi_cmm

“40 கி.மீ தூரம் ஓடும் காரின் மேற்கூரையில் பயணம்!” – காவலருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு!

September 30, 2026

சென்னை: தனது உயிரைப் பணயம் வைத்து ஓடும் காரின் மேற்கூரையில் பயணித்துக் குட்கா கடத்தல்காரர்களை மடக்கிப் பிடித்த தலைமைக் காவலர்

ranil 1

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீது ஒளிப்பதிவாளர் தாக்குதல்!

September 30, 2026

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்

6l

பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் சேதம்

September 30, 2026

பெல்மடுல்ல லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று

arre

CEB ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது

September 30, 2026

மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின் இணைப்பை துண்டிக்க சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர் மீது தாக்குதல் நடத்தியதாகக்

Murder

கடுகன்னாவ பொலிஸ் பிரிவில் ஒருவர் கொலை

September 30, 2026

கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுங்கல பகுதியில் நேற்று மாலை பாட்டிலால் தாக்கப்பட்டதில் காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை

a

அனோஜன் மரண தண்டனைச் சிறைக்கு மாற்றப்பட்டார்!

September 30, 2026

வுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் தற்போது மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டுப் பலத்த

ull

உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம்

September 30, 2026

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்

namal 22222222222

நாமல் ராஜபக்ஷவுக்குப் பிணை!

September 30, 2026

ஏர்பஸ் (Airbus) வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, கொழும்பு கோட்டை

plane121

விமானிகளுக்கு இடையே மோதல் – துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது

September 30, 2026

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானம் ஒன்றில், உதவி விமானிகளுக்கு (co-pilots) இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த

vedukunari1

பண்டைத் தமிழர் நாகரிகத்தின் தொல்பொருள் சான்றுகளைக்கொண்ட வெடுக்குநாறிமலையும் பறிபோகிறதா

September 30, 2026

: நடராஜர் காண்டீபன் கடந்த 2026 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நான் வெடுக்குநாறி மலைக்குச் சென்றிருந்தேன். அந்த

batti land

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

September 30, 2026

மட்டக்களப்பு, மயிலத்தமடு-மாதவனைப் பகுதியில் பால் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத்