IMF திட்டத்தின் ஸ்திரத்தன்மையைக் கொண்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை நடவடிக்கை: ஜனாதிபதி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூலம் எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை, நாட்டின் மறுமலர்ச்சிக்கான வலுவான அடித்தளமாகப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் விரும்புவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியின் முக்கிய விபரங்கள் இதோ: இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளை வியாழக்கிழமை (17) சந்தித்தபோதே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இக்கருத்துக்களை வெளியிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் (EFF) ஏழாவது மதிப்பீடு (7th […]
வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இருவர் கைது!

மன்னார், முழங்காவில் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினரால் கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, முழங்காவில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப் ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, […]
பாதாளஉலகத்தை சேர்ந்தவர்களுக்கு கடவுச்சீட்டு – அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களுக்கு போலி கடவுச்சீட்டினை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குடிவரவு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிவரவு திணைக்களத்தில் வைத்து உதவிக்கட்டுப்பாட்டாளரை கைதுசெய்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டவர் கம்பஹாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையவுள்ளன: சஜித் பிரேமதாச அறிவிப்பு

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து, ஒருகட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) கைகோர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (17) கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் சேவைகள் சபையின் மண்டபத்தில் நடைபெற்ற “ஜே.ஆர்., ஆளுகை மற்றும் நடுத்தரப் பாதை” (J.R., Governance and the Middle Path) என்ற தலைப்பிலான […]
தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி காரைநகரில் போராட்டம்

தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி நேற்று (17) காரைநகர் – ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த […]
எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கையில் கையெழுத்து

முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ள நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக, சுமார் 80 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்ட […]
செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்

அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் […]
ரயில் பயணச்சீட்டுகளை இணையவழி ஊடாக பெறும் வசதி

ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ‘pravesha’ அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. […]
இலங்கையை மீண்டும் வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (17) இடம்பெற்றது. Cardiff இல் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து […]
வன இலாகா ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். […]