முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் – “தாயக அரசியல் துறை” இன்று ஆரம்பம்

வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செயலாளர்நாயகமுமான செ. அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக […]
நல்லூர் ஆலயத்தில் வழிபாடு & யாழ். கோட்டை புனர்நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்டார் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் வரலாற்றுப் பாரம்பரியக் கோட்டையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொல்பொருள் புனர்நிர்மாணப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், வரலாற்று அம்சங்கள் பாதுகாக்கப்படும் விதம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து […]
டக் ஃபோர்டு – டிரம்பிற்கு இடையிலான மோதல்: தேர்தல் கணிப்புகள்

டிரம்புடனான ஃபோர்டின் மோதல் முக்கிய இடைத்தேர்தல்களை பிசி (PC) கட்சிக்கு சாதகமாக திருப்புமா? வல்லுநர்களின் கருத்துக்கள் ஃபோர்டின் செல்வாக்கு அதிகரிப்பு, நெருக்கமான போட்டிகளில் டோரிகள் (PC) முன்னிலை பெற உதவக்கூடும் அரசியலில் பல மாதங்களாக பின்னடைவைச் சந்தித்து வந்த டக் ஃபோர்டு, இந்த வாரம் டொனால்ட் டிரம்புடன் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு அதிரடி தாக்குதலைத் தொடங்கினார். கணிப்பிட முடியாத அமெரிக்க அதிபருடனான இந்த மோதல், ஒன்டாரியோ முதல்வரின் பலங்களுக்குப் பலம் சேர்ப்பதுடன், இந்த வாரம் நடைபெறவுள்ள […]
ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை உறுதிசெய்தது இந்திய பாதுகாப்பு அமைச்சு -பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை உறுதி செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 8 ம் திகதி முதல் பத்தாம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இலங்கையின் தலைவர்களுடன் பிரதானமான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய பாதுகாப்பு அமைச்சர் தனது விஜயத்தின் போது இலங்கை தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்,கொழும்பில் […]
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

நிவின் பாலி – மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வணிக ரீதியிலான வெற்றிக்காக படக்குழுவினரை அழைத்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிஸ் ஏ.டி இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. […]
‘ஹாய்’ – நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைத்துவிட்டது – நடிகர் கவின்

நயன்தாரா, கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. ஆக. 28-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, கவின் பேசும்போது, ‘‘இந்தப் படத்துக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில […]
சமூக வலைதளங்களில் சர்ச்சையில் கயாடு லோஹர்!

கயாடு லோஹர் நடித்துள்ள ‘ஐ அம் கேம்’, ‘இம்மார்டல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளன. துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ‘இம்மார்டல்’ படத்தின் விளம்பரப் பணிகளில் பெரிதாகக் கலந்துகொள்ளவில்லை என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது. அது குறித்து காயடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “ஐ அம் கேம்’ பட விளம்பரத்துக்காக ஒரு நாள் மட்டுமே கால்ஷீட் கொடுக்க முடிந்தது. அதனால் அதில் பங்கேற்றேன். […]
‘தர்மன்’ 2-ம் கட்ட படப்படிப்பு நிறைவு

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 13-ல் தொடங்கிய இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தர்மன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஸ்வாக் மோட் (SWAG Mode) ஆன்’ என்று தெரிவித்துள்ளது. […]
‘அரசன்’ நீங்கள் நினைப்பது போல சிறிய படம் கிடையாது – சிலம்பரசன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெற்றிமாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலம்பரசன் டிஆர், “அரசன் படத்தில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இது நீங்கள் நினைப்பது போல சிறிய படம் கிடையாது. என் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் முதுமை வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் […]
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: யாரையும் பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை – அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம்!

கோவை: டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகளே பின்னணியாக உள்ளன என்றும், யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் அரசு சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் விக்னேஷ் அளித்த பேட்டி மற்றும் டாஸ்மாக் விவகாரத்தின் முழுமையான விவரங்கள்: கூடுதல் கட்டணம் மற்றும் அரசின் நடவடிக்கை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாகப் புகார்கள் இருந்து […]