இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை உறுதி செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 8 ம் திகதி முதல் பத்தாம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இலங்கையின் தலைவர்களுடன் பிரதானமான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்திய பாதுகாப்பு அமைச்சர் தனது விஜயத்தின் போது இலங்கை தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்,கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்திப்பார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சு வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவினரும் அமைச்சருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
இந்திய பெருங்கடலில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் சூழலில் இருநாடுகளுக்கும் இடையிலான பராம்பரியமிக்க வலுவான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு இந்த விஜயம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
(ரி)