“செய்தியாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்!” – தவெக எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது சகோதரர் மீது பாய்ந்தது வழக்கு!

ராணிப்பேட்டை சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைக் கடுமையாகத் தாக்கியதாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் கபில், அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது காவல்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. முதல்வர் படத்தால் வெடித்த சர்ச்சை: கடந்த ஜூலை 23-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானது. படத்தைப் பார்த்துவிட்டு வந்த சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ கபிலிடம், சிவா என்ற யூடியூப் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அவரை எம்.எல்.ஏ […]

“கர்நாடக பேருந்து சிறைபிடிப்பு!” – கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிரடி மறியல்; ஸ்தம்பித்த போக்குவரத்து!

சென்னை கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஈடுபட்ட திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றத்தைக் கிளப்பிய திடீர் மறியல்: கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் மாவட்டச் செயலாளர் முத்துராஜ் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை […]

“முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா?” – சட்டசபையில் அனல் பறந்த விவாதம்; கையேடு விதிகள் சொல்வது என்ன?

சென்னை தவெக அமைச்சர் ரமேஷ் எழுப்பிய கேள்வியால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா என்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துச் சட்டமன்ற உறுப்பினர் கையேடு என்ன சொல்கிறது என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவையில் வெடித்த காரசார விவாதம்: மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை கண்ணியம் குறித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த தவெக அமைச்சர் ரமேஷ், “8 கோடி மக்களின் […]

“தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது அவமானமல்ல!” – துணை குடியரசுத் தலைவர் சி.பி.ஆர் விளக்கம்; மேடையில் ஆளுநர் தடுமாற்றம்!

திருவாரூர் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாகப் பாடுவது அவமானமல்ல என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படியே பாடல்கள் […]

“காவலரை கன்னத்தில் அறைந்த இளைஞர்!” – வைரலான வீடியோவுக்குத் தஞ்சை காவல்துறை அதிரடி விளக்கம்!

தஞ்சாவூர் தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது, சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோவுக்குத் தஞ்சை மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. பேனர்கள் அகற்றம்.. விசிக மறியல்: விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் மற்றும் உளுந்தூர்பேட்டை மாநாட்டை முன்னிட்டுத் தஞ்சை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது […]

அடுத்த பரிமாணத்தில் உங்கள் Behind Me Media – வருகிறது e paper!

உலகத் தமிழ் ஊடகத்தளத்தில் Behind Me சர்வதேச ஊடக வலையமைப்பு அடுத்த பரிமாணத்தில் இன்றிலிருந்து கால் பதிக்கவிருக்கின்றது. Behind Me Media – e paper உங்களுக்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாரந்தோறும் வெளியாகவிருக்கிறது. காலத்தின் தேவை கருதியும் தகவல்களை எழுத்து வடிவில் முறையாகப் பதிவு செய்து ஆவணப்படுத்தவும் உலகளாவிய ரீதியில் எமது மக்களுக்கான கருத்துப் பகிர்வுக்கான பரந்த ஒரு தளத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் Behind Me Media – epaper இன் தோற்றம் அமைந்து […]

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாகச் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது ராஜினாமா கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு

இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அப்பிரிவின் அண்மைய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 6,040 பேருக்கும் டெங்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், களுத்துறை மாவட்டத்தில் 5,964 பேருக்கும், காலி மாவட்டத்தில் 5,063 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,946 […]

பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் […]

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டம்!

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், தொலைபேசிகளை வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு, வெள்ளவத்தை தனியார் ஹோட்டலில் காலை இடம்பெற்றபோதே இலண்டனின் பிரபல தொழிலதிபரும், பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும், 25 ஊடகவியலாளர்களுக்கு தொலைபேசிகளும் என […]