மீண்டும் திரையில் பிரபு – சுகன்யா

‘செந்​தமிழ்ப் பாட்​டு’, ‘சின்ன மாப்​ளே’, ‘மிஸ்​டர் மெட்​ராஸ்’ ஆகிய படங்​களில் பிரபு, சுகன்யா ஜோடி​யாக நடித்​திருந்​தனர். இந்​தப்படங்​களுக்​குப் பிறகு இரு​வரும் மீண்​டும் இணைந்துள்​ளப் படம், ‘மேரி கோல்​டு’. இதில் இவர்​கள் 31 ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும்சேர்ந்து நடிக்​கின்​றனர். மேலும் ரக் ஷன், நம்​ரி​தா, சிங்​கம்​புலி, வடிவுக்​கரசி, இமான் அண்​ணாச்​சி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்​கின்​றனர். மல்​லி​கார்​ஜுன் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்​குச் சித்து குமார் இசையமைக்​கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறு​வனம் மூலம் ஆர்​.ர​வீந்​திரன் தயாரிக்​கிறார். சுதர்​சன் இணை […]

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா…

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்​தில் பேட்​டி​ அளித்​துள்ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: ரஜினி சாரை நேரில் பார்த்​த​போது பிரமிப்​படைந்​தேன். அவருடன் பணி​யாற்​று​வது அதுவே முதல் முறை என்​ப​தால், பதற்​றத்​தில் உறைந்​து​விடு​வேனோ என்று பயந்​தேன். அதனால் ஒத்​தி​கைக்கு முன்​பாக என்னை அவருக்கு அறி​முகப்​படுத்தி வைக்க ஷங்​கர் சாரிடம் கேட்​டுக் கொண்​டேன். அதைக் கேட்டு அவர் சிரித்​தார். அந்​தப் படம் குறித்த விவரங்​கள் அனைத்​தும் ரகசி​ய​மாகவே வைக்​கப்​பட்​டிருந்​த​தால் அதில் யார் இருக்​கிறார்​கள் அல்​லது […]

“தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்!” – நயினார் நாகேந்திரனை விளாசிய அமைச்சர் ரமேஷ்!

சென்னை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெண்கள் மற்றும் தாய்மார்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அருவருப்பின் உச்சம்”: இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ், “பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத ஒரு மூன்றாம் தர நபரைப் போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது அருவருப்பின் உச்சமாகும்,” என்று கடுமையாகச் சாடியுள்ளார். “குறைந்தபட்ச மனித […]

“மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC-க்கு தனிப் பிரிவு வேண்டும்!” – பிரதமர் மோடிக்கு ஜோதிமணி எம்.பி. அவசரக் கடிதம்!

சென்னை 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC/SEBC) தனிப் பிரிவு உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். “சமூக நீதியை நிலைநாட்ட சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம்”: இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி எம்.பி., “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், இந்திய தேசிய காங்கிரஸும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் […]

சினி​மாவைப் பொறுத்​தவரை, ‘ஜென்​-ஸி’ தலை​முறை​யில் மிக​வும் மூத்​தவ​ன் நானாகத்​தான் இருப்​பேன் – கமல்ஹாசன்

நடிகர் கமல்​ஹாசன் சினி​மா​வில் 66-வது ஆண்டை நிறைவு செய்து 67-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​துள்​ளார். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​தனர். அவர்​களுக்கு நன்றி தெரி​வித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்த 67 ஆண்​டு​களில், உண்​மை​யான கற்​றலாக நான் கருது​வது சுமார் 20 ஆண்​டு​களை மட்​டுமே. மீத​முள்ள காலம் கழி​வுநீர் ஓட்​டத்​தோடு அடித்​துச் செல்​லப்​பட்​டதைப் போன்​றது. இருப்​பினும், நம்​பிக்கை தரும் விஷ​யம் என்​னவென்​றால், அந்த நீரோட்​டம் எவ்​வளவு இருண்​ட​தாக இருந்​தா​லும், ‘கூட்​டு சினி​மா’ எனும் அந்த மாபெரும் […]

“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – துப்பாக்கியால் உயிரைத் தீர்மானிப்பதா? வேல்முருகன் ஆவேசம்!

சென்னை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இரு மாநில அரசுகளுக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சுட்டுக்கொல்ல வேண்டிய அவசியம் என்ன?: “வனத்துறையினர் வேட்டையாடச் சென்றதாகக் கூறுகின்றனர்; ஆனால் மாடுகளைத் தேடிச் சென்றதாக உறவினர்கள் கூறுகின்றனர். உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது. மடக்கிப் பிடிக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன […]

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் ‘பேங் பேங்’ டீசர் வெளியீடு!

பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ‘மனதை திருடிவிட்டாய்’, ‘எங்கள் அண்ணா’ போன்ற படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து இருவரும் ஒன்றிணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கியுள்ளார். ஸோம்பி கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஒரு கற்பனையான உலகத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. டீஸரில், பிரபுதேவா அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்திலும், வடிவேலு ஆதிவாசி தோற்றத்திலும் தோன்றுகின்றனர். இருவருக்கும் […]

“கும்பகோணம் டிகிரி காபிக்கு புவிசார் குறியீடு!” – 5 பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு விண்ணப்பித்து அசத்திய தமிழக அரசு!

சென்னை தமிழகத்தின் பாரம்பரியமிக்க அடையாளங்களான கும்பகோணம் டிகிரி காபி, பாலமேடு பால்கோவா உள்ளிட்ட 5 முக்கிய உணவுப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடு (GI Tag) பெறத் தமிழக அரசு முறைப்படி விண்ணப்பம் செய்துள்ளது. முதலீடும் ஏற்றுமதி ஊக்குவிப்பும்: தமிழகத்தில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பணிகளை ‘டி.என்.எபெக்ஸ்’ (TN-APEX – தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய […]

“கடந்த 5 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு!” – வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த 5 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. 7 மடங்கு அதிகரித்த தாக்குதல்கள்: கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல தேவைகளுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை […]

மேயர் தேர்தல் கருத்துக்கணிப்பு: ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலை

டொரண்டோ மேயர் தேர்தலுக்கான அண்மைக்காலக் கருத்துக்கணிப்பில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) தொடர்ந்து முன்னிலையில் உள்ள அதேவேளையில், களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரான கிரிஸ் அலெக்சாண்டர் (Chris Alexander) 10 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.லைசன் ஸ்ட்ராட்டஜிஸ் (Liaison Strategies) நிறுவனம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பின்படி, முடிவெடுத்த மற்றும் ஒரு பக்கமாகச் சாயக்கூடிய வாக்காளர்களிடையே ஒலிவியா சௌ 47 சதவீத ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இது, அவருக்கு அடுத்தபடியாக 40 சதவீத ஆதரவைப் பெற்றுள்ள […]