சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மின்சார விமானம்

நியூயார்க்கில் உள்ள விமான நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது, உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் 1,100 அடி உயரத்திற்குச் சென்று 27 நிமிடங்கள் வெற்றிகரமாகப் பறந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. இந்தப் பயணத்திற்காக வெறும் 477 ரூபாய் பெறுமதியான மின்சாரம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகச் சம்மந்தப்பட்ட விமானத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பேட்டரியில் இயங்கக்கூடிய தற்போதைய உலகின் மிகப்பெரிய மின்சார விமானம் என்ற வரலாற்றுச் சாதனையை இவ்விமானம் தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிகரமான […]

பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு?

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் விசேட தணிக்கைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார். இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களில், 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இந்தத் தணிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. […]

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (16/08/2025) இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் […]

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மா ஓடையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மாண்டதுடன், மற்றைய இருவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுத் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், சனிக்கிழமை (15) பகல் இடம்பெற்றுள்ளது. மீரிகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மதுருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞன் பலியாகியுள்ளார்.

ஆகஸ்ட் 30 வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருப்பதுடன், அன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் […]

ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் மையத்தில் நடைபெறும் சிறப்பு தொல்லியல் கண்காட்சி இன்று பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூலை 2 ஆம் திகதி முதல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சயிதரன் மற்றும் களனி பல்கலைக்கழக தொல்லியல் பட்டப்பின் படிப்புக்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் இணைத் தலைமையில் சிறப்பு தொல்லியல் அகழாய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கேரள பல்கலைக்கழக தொல்லியல் துறையும் பங்களிப்பு வழங்கி வருகிறது. வட இலங்கையின் ஆரம்ப […]

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மைய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகின்ற புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி ரிச்சர்ட் நந்தினியின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வின் போது பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக […]

பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காய நுகர்வு சுமார் 320,000 மெட்ரிக் தொன்னாகும். வரலாற்றில் அதிகபட்ச பெரிய வெங்காய உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதுடன், அந்த ஆண்டில் […]

‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ டீசர் வெளியீடு!

வெங்கட் பிரபு கதையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘ராஜாஸ் ப்ளேலிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஆர்ப்பரிக்கும் பெரும் கடல் அலை ஓசையுடன் தொடங்குகிறது 1.34 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர். இளையராஜா பாடல் கேட்டால் டைம் ட்ராவல் பண்ண முடியுமா என ஒருவன் கேட்க, வாக்மேனில் ஒருவன் இளையராஜா பாடல் கேட்கிறான். அது பாடல் கேட்டவனை, அவன் வாழ்வில் பின்னோக்கி இழுத்துப் போகிறது. கருப்பு வெள்ளையில் கவிதையாய் விரியும் காட்சிகளில் பாடல் […]

“போதிய மழையில்லை!” – வறண்டு வரும் வீராணம் ஏரி… சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

காட்டுமன்னார்கோவில் போதிய மழை இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருவதால், சென்னைக்கான குடிநீர் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் தண்ணீர் திறக்கப்படாததால் சிக்கல்: சென்னை மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையிலிருந்து வடவாறு வழியாகத் தண்ணீர் வந்தடைகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணைத் தண்ணீர் மூலம் வீராணம் ஏரி நிரப்பப்பட்டு சென்னைக்குக் குடிநீர் அனுப்பப்படும். ஆனால், இந்த […]