“இந்த ஒற்றுமைப்போக்கு தொடர வேண்டும்!” – நீட், FCRA தீர்மானங்கள் நிறைவேற்றத்திற்கு கமல்ஹாசன் எம்.பி. அதிரடி வரவேற்பு!
சென்னை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் மற்றும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) திருத்த மசோதாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். “சட்டமன்றத்தின் ஒற்றுமை மகிழ்வளிக்கிறது!” இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்வளிக்கிறது. நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக […]
“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு!” – மாணவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் விஜய் அதிரடி உறுதிமொழி!
சென்னை சென்னையில் ’போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் சேர்ந்து ஆவேசமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மாநிலக் கல்லூரியில் பிரம்மாண்ட உறுதிமொழி ஏற்பு: சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், கையை உயர்த்தியபடி, ”போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு […]
“நெல், கரும்பு, பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி கோரிக்கை!

சென்னை நெல், கரும்பு மற்றும் பால் கொள்முதல் விலையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லுக்கான கொள்முதல் விலை போதாது: டெல்லி செல்வதற்கு முன்பாகச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய், நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி, சாதாரண நெல் […]
“குதிரை பேர விவகாரம்!” – சட்டப்பேரவையில் அதிமுக, தவெக இடையே அனல்பறக்கும் வார்த்தைப்போர்! ஈபிஎஸ் ஆவேசம்!
சென்னை சட்டப்பேரவையில் ‘குதிரை பேரம்’ குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கடுமையான குற்றச்சாட்டால், அதிமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே கடும் வார்த்தைப்போர் வெடித்தது. “குதிரை பேரத்தில் ஈடுபடக் கூடாது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வெற்றி பெற்று ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் உங்கள் கட்சியிலேயே சேர்பவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற குதிரை பேரச் செயல்களில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஈடுபடக் கூடாது,” என […]
“ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்க வைப்பதாக மிரட்டல்!” – ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளர் அதிரடி கைது! 3 நாள் காவலில் தீவிர விசாரணை!

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டித் தொழிலதிபரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் பறித்ததாகக் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் அவரது கூட்டாளி சீனிவாசன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பறிப்பு: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் குமார் என்பவர், யானைகவுனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பகுஜன் சமாஜ் […]
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம்: 3/2 பெரும்பான்மையா, மக்கள் வாக்கெடுப்பா? உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமா, அல்லது சாதாரண பெரும்பான்மை போதுமா, அல்லது பாராளுமன்ற பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாதாளஉலக குழுக்களிடையே மோதல்கள் வெடிக்கலாம்-பொலிஸார்

கொழும்பு மாளிகாவத்தையில் பாதாள உலகத்தை சேர்ந்த கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதாளஉலக குழுக்களிடையே மோதல்கள் வெடிக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இரண்டு பாதளஉலக குழுக்களிடையேயான மோதல்கள் காரணமாகவே நேற்றைய கொலை இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸார் சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக இரண்டு பொலிஸ்குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த வருடம் 27 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டு நாடாக மாறியுள்ளது- இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டுநாடாக மாறியுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்திய இலங்கைவர்ததக சங்கத்தின்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கூறுகையில், கடந்த ஆண்டு நாட்டிற்குள் வந்த முதலீடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொண்டு இந்தியா இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக மாறியுள்ளது என்றார். மேலும், பொருளாதார உறவுகள் வர்த்தகத்தைத் தாண்டி எரிசக்தி, இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொடக்க நிலை நிறுவனங்கள் வரை விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் அனுபவம் செயல்முறை மட்டத்திலான சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்று வாதிட்ட அவர், இந்தியா 1,500-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளதாகவும், 40,000-க்கும் மேற்பட்ட இணக்க முறை தேவைகளைத் தளர்த்தியுள்ளதாகவும் அல்லது ஒழித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். “அவைதான் களத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்கள்; செயல்முறைச் சீர்திருத்தங்கள். பொதுவாக, நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அற்புதமான மற்றும் துடிப்பான இலக்குகளை அடைவதற்கு இவையே மிகப்பெரிய தடைகளாக இருக்கின்றன.” எரிசக்தி இணைப்பு, அதிக விமானங்கள் மற்றும் கப்பல் சேவைகள், புதுப்பிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய தொழிற்பேட்டை தாழ்வாரங்கள் (industrial corridors) மூலம் இலங்கையும் இந்தியாவும் இப்போது பொருளாதார ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த வேண்டும் என்று ஜா கூறினார். இலங்கையானது இந்தியாவின் NASSCOM திஷா திட்டத்தின் முதல் வெளிநாட்டுப் பயனாளி என்பதைக் சுட்டிக்காட்டிய அவர், அத்திட்டத்தின் கீழ் 40 இலங்கை தொழில்முனைவோர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து (CEOs) வழிகாட்டுதலைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4.1 பில்லியன் டாலர் உதவியை, இந்த உறவு உறுதியான பலன்களைத் தந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர் மேற்கோள் காட்டினார். அதேவேளையில், இதன் நீண்டகால வலிமையானது தொடர்ச்சியாக பொருளாதார முடிவுகளை உருவாக்குவதைப் பொறுத்தே அமையும் என்றும் குறிப்பிட்டார்.
சீனா, இந்தியா மற்றும் ஓமன் பார்வை மத்தல விமான நிலையத்தின் மீது

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) இயக்குவதற்கான ஏலப் போட்டியில் சீனா, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. ஆர்வம் வெளிப்படுத்தும் கடிதங்களின் (EoI) காலக்கெடு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, இலங்கை அரசாங்கத்திற்கு மொத்தம் 19 பரிந்துரைகள் கிடைத்துள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டுப் பரிந்துரைகளில் சீனா, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளதை துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக உறுதிப்படுத்தினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பெறப்பட்ட பரிந்துரைகளை மதிப்பீடு செய்யவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிலிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியுடன் உருவாக்கப்பட்ட மத்தல விமான நிலையம், 2013-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஜூன் 8-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவின் கீழ் பெறப்பட்ட 19 பரிந்துரைகளின் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்- ஜெனீவா செல்லப்போவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கான பொறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் முன் எடுத்து செல்லப்போவதாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகளை தொடர்ந்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பல முக்கிய திணைக்களங்களின் அதிகாரிகளை விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் வன்முறைகளை தடுப்பது மற்றும் அது தொடர்பிலான பொறிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்சட்டத்தரணி நிமால் ஜி புஞ்சிவே தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர்,அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரை 18 ம் திகதி விசேட கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கான பொறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன் எடுத்து செல்லவேண்டிய நிலைக்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதிசெயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகளில் அமைதியின்மை மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.