IGP மற்றும் தலைமை நீதிபதி இல்லங்களை வீடியோ எடுத்தவர் கைது

பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் 40 வயதுடைய நபர் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை (06) இரவில் இடம்பெற்ற இக்கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரின் கைப்பேசியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை (STF) அதிகாரி ஒருவர், அங்கு அருகில் […]

கோட்டாவுக்கு அதிரடி உத்தரவு

2011-ஆம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதி மன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதி மன்றத்திற்கு அடுத்த மாதம் 29-ஆம் திகதி இணையவழியாகச் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிக விபரங்களுக்கு https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

வினாத்தாள் மொழிபெயர்ப்புப் பிழைகளுக்கு முற்றுப்புள்ளி

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் கடந்த காலங்களைப் போன்ற தமிழ் மொழிமூல வினாத்தாள்களில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இனி ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்பட்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி மற்றும் உயர் கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது கருத்துத் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி., உயர்தரப் […]

பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலை கைதிகள் போராட்டம்

நீர்கொழும்பு, தளுபொத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை நோக்கித் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகச் சம்பவ இடத்திலிருந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் காவல்துறையினர், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF), கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை […]

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07) காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்வச்சந்நிதியான் மகோற்சவ காலத்தில் லஞ்ச் சீற் பாவனை, புகையிலை பொருட்கள் விற்பனை, பச்சை குத்த முற்றாக தடை!

செல்வச்சந்நிதியானின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் ஆலய சூழலில் உணவு கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீற் பாவனை, புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை மற்றும் பச்சை குத்தும் செயற்பாட்டிற்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி செயற்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவரால் விடுக்கப்பட்டுள்ள பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது […]

“மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்கத் தயார்!” – காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி உரை!

சென்னை தவெக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், காவிரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்! சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “காவிரி நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்குத் துளியும் இல்லை. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் […]

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு மற்றும் போனஸ்: சென்னை தொழில் தீர்ப்பாயம் மாஸ் உத்தரவு!

சென்னை தமிழகத்தில் இரவு பகல் பாராது மக்கள் சேவையாற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான 25 சதவீத ஊதிய உயர்வு மற்றும் 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் எனச் சென்னை தொழில் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது! இந்தத் தீர்ப்பு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மற்றும் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் கோரி கடந்த […]

நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் கருணாநிதி: 8வது நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் புகழஞ்சலி!

சென்னை தமிழக வரலாற்றில் மாபெரும் ஆளுமையாகவும், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாகவும் விளங்கிய முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) தமிழகம் முழுவதும் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவுநாளையொட்டி இன்று காலை சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமான அமைதிப் பேரணி தொடங்கியது. இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய […]