நடிகை திரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் – குஷ்பு கண்டனம்

நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, […]

500 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று (03) மாலை குறித்த இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர். இதன்போதே, வைத்தியப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 […]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி!

2026 ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அம்மாத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆகும். இது கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன்ப்பிடுகையில் 1.7% வீழ்ச்சியாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 44,547 (26%) ஆகும். மேலும், ஜூலை […]

பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்காக விசேட ஒழுங்கு!

நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதற்காகச் விசேட ஒழுங்கு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டத்தைக் களுவாஞ்சிகுடி நகரிலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என்பதால், அதைக் குறைப்பதற்காகவே இந்தச் விசேட ஒழுங்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் பொதுவாக வீதி விபத்துகளால் சுமார் […]

நீண்டகாலமாக நிலுவை வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும்

நீதிமன்ற கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்வு காணும் வகையில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய விசேட செயற்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிலவும் வழக்குத் தேக்க நிலைமை, நீதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் நீதித்துறை செயற்றிறனை மேம்படுத்தவேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் […]

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை

த்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. […]

இயக்கச்சி வீதி விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த ‘ஹையேஸ்’ ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். சாவடைந்தவர் […]

இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதமே சிறைகளில் ஏற்படும் மோதல்களுக்கு காரணம்!

நாட்டில் உள்ள சிறைச்சாலை அமைப்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலை உருவெடுத்துள்ளது. நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் மோதல் நிலைமை உருவாகிறது என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். பத்தேகம நீதிமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (3) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் […]

ஹட்டன், கொட்டக்கலையில் வெள்ளம்!

ஹட்டன், கொட்டக்கலை பகுதியில் நேற்று (02) இரவு முதல் பெய்த அடை மழையால் வெள்ளநீர் புகுந்துள்ளதால் கொட்டகலை லொக்கில் பகுதியில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், தொடர் கனமழையின் காரணமாக ஹட்டன் […]

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

தஞ்சையில் நேற்று (03) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக […]