மீண்டும் விளக்கமறியலில் பிள்ளையான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதுடன், இதன்போது அவர் காணொளி ஊடாக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சிவநேசதுரை […]
காஷ்மீரில் சிறார், இளைஞர்களை பாகிஸ்தான் ராணுவம் சுடுகின்றது?

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 53 தொகுதிகளில் 12 […]
சீனாவின் சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு?

சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’ ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோசகர்கள் நிதின் ஜீத் சிங் மற்றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்களிடம் கருத்து கேட்டனர். இதில் பங்கேற்ற இந்தியர்கள் கூறியதாவது: சீன சமூக ஊடகத் தளங்களில் இந்தியர்களின் உணவுப் […]
ஒப்பந்தத்தை எட்ட ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு – ட்ரம்ப்

“மேற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது சென்ற வார இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தாக்குதல் திட்டம் இடைக்காலமாக […]
யோஷித, கரன்னகொடவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கும் பட்சத்தில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (04) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு […]
‘உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்’ – முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தவெக அரசுக்கு எதிராக திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவதூறான கருத்துகளைப் பேசியதாகப் பெரும் புகார் எழுந்தது. […]
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார்.சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். “யாகாவராயினும் நா காக்க” எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க […]
சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஹட்டன் – பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு இருந்த மூன்று பெண்களும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் […]
நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும்!
நாட்டின் விவசாயிகளின் அறுவடைக்கு உடனடியாகச் சாமானிய விலையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “இந்த நாட்டின் விவசாய மக்கள் தங்களது பிரச்சினைகளைக் கூறும்போது, அவர்களைக் கசிப்புக்காரர்கள் என்று கூறுகிறார்கள். நெல் விலை குறித்து விவசாயிகள் பேசும்போது, ‘இல்லை நாம் வழங்க மாட்டோம்’ என்று கூறுகிறார்கள். உரம் […]
படுகொலை செய்யப்பட்ட காதலியின் கல்லறையில் காதலன் மாண்டார்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரைப் பணயக்கைதிகளாகக் காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணயக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை […]