இங்கிலாந்து கால்பந்து சங்கம் பீஃபா தலைவருக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற முடிவு

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஆதரவைத் திரும்பப் பெற இங்கிலாந்து கால்பந்து சங்கம் முடிவு செய்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் உள்ளிட்ட தொடர்களை நிர்வகிக்கும் புதிய அமைப்பில் 20 சதவீத பங்குகளை விற்று 4.2 பில்லியன் டொலர் நிதி திரட்ட ஃபீஃபா திட்டமிட்டிருந்தது. ஆனால், பல்வேறு கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் […]
ஏவுகணைத் தடுப்புப் பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம்

அமெரிக்க பாதுகாப்புத் துறை, ஏவுகணைத் தடுப்புப் பாகங்களின் உற்பத்தித் திறனை விரிவாக்குவதற்காக ‘லொக்ஹீட் மார்ட்டின்’ மற்றும் ‘நோர்த்ரோப் க்ரம்மன்’ ஆகிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை அமெரிக்க அரசு வெளியிடவில்லை. உக்ரைன் மற்றும் ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்க இராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத குப்பைக் கொட்டல்: உடனடி நடவடிக்கை கோரி மனு

யாழ்ப்பாணம், வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மனு கையளித்துள்ளனர். வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து, மனுவை கையளித்துள்ளனர் வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த மனுவில் கையளித்துள்ளனர். வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் […]
சீரற்ற வானிலையால் இதுவரை 6 பேர் பலி; ஒருவர் மாயம்

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நேற்று பெய்த மழையினால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று (03) அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், அதில் சிக்கிய […]
கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு

பாறைச் சரிவு காரணமாக கடுன்னாவ பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுன்னாவ பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதுடன், இதன் காரணமாக கணேதென்ன மற்றும் கடுன்னாவ இடையிலான வீதிப் பகுதியை தற்காலிகமாக மூட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக […]
புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அங்கீகாரம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீட்டிப்பு அடங்கிய புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான 360 நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இதனைக் குறிப்பிட்டார். இதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 வருடங்களால் உயர்த்துதல், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் […]
PickMe கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்

திருக்கோணமலை பகுதியில் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் பிக்மி(PickMe) செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மி(PickMe) அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். சாரதிகளின் குற்றச்சாட்டின்படி, திருக்கோணமலை சாரதிகளுக்கு குறைந்த கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக திருக்கோணமலையில் இருந்து சிகிரியா செல்ல ரூ.9,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், […]
பல பகுதிகளில் திடீர் மின்தடை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மாகாணத்தின் பல பகுதிகள், கொழும்பின் சில பிரதேசங்கள் உட்பட ஏராளமான பிரதேசங்களில் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேல், சபரகமுவ […]
கட்டுநாயக்க விமான நிலைய பெண்களுக்கான மலசலகூடத்திற்குள் போதைப்பொருள்?

ரூபாய் 1,18,70,000 (ஒரு கோடியே பதினெட்டிலட்சத்து எழுபதாயிரம்) பெறுமதியான “ஹஷிஷ்” (Hashish) போதைப்பொருள் தொகையொன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 03 ஆம் இலக்கப் பொதி பத்தியின் அருகிலுள்ள பெண்களுக்கான மலசலகூடத்திற்குள் இருந்த 02 குப்பைத் தொட்டிகளுக்குள் கைவிடப்பட்ட நிலையில், திங்கட்கிழமை (03) அன்று அதிகாலையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. அளவு மற்றும் பொருட்கள்: 1 கிலோகிராம் 187 கிராம் எடைக் கொண்ட இந்த ஹஷிஷ் போதைப்பொருள் தொகையானது 07 பொதிகளில் […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டா கைதாவாரா?

019-ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ஆணைப்பேராணை (Writ Petition) மனு மீதான தனது உத்தரவை வழங்குவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 22-ஆம் திகதியை திங்கட்கிழமை (03) அன்று நிர்ணயித்தது. அதற்கமைய, இந்த மனுவை முன்னெடுத்துச் செல்வதா அல்லது ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்வதா என்பது குறித்து நீதிமன்றம் செப்டம்பர் 22-ஆம் திகதி தீர்ப்பளிக்கும். மேன்முறையீட்டு நீதிமன்றத் […]