நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது.
6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இந்தப் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, தவெக மகளிர் அணி தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்த பொலிஸார்
இதையடுத்து, தஞ்சையில் இருந்து வந்த சென்னை போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.
குஷ்பு கண்டனம்
இதற்கிடையில், நடிகையும் பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் நடிகை திரிஷாவை அவமதித்ததாகக் குற்றம்சாட்டிய அவர், “தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யோஷித, கரன்னாகொடவிற்கும் உத்தரவு
அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.