சிலாபத்துறையில் 677 கிலோவிற்கும் அதிகளவான பீடி இலைகள் கைப்பற்றல்!

கற்பிட்டி – வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை – சாவேரியபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை (01) மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இத்தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ மற்றும் ‘தேரபுத்த’ ஆகிய கடற்படை முகாம்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கடற்கரைப் பகுதிகளில் […]
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள்

தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து புதிய அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல்கள், இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மலையக மக்களின் காணி உரிமைகள் குறித்து கலந்துரையாடினர் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து, அம்மக்கள் […]
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(2.8.2026) பிற்பகல் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடல் சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின் நிலைமையைப் பற்றி […]
இரணை மடு காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம்

கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்து சடலம் இன்றைய தினம் (03) அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம அலுவலரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஹரக் கட்டா பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழக்கு தொடர முடியாது

பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு […]
கிளிநொச்சி இரணைமடு காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணமடு குளத்துப் பகுதியில் இன்று (03) திங்கட்கிழமை எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரணைமடு குளத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேட்கொண்டவர்களினால் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸ் நிபுணர்கள் வருகை தந்து சான்றுகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவத்தை மாவட்ட நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும், உயிரிழந்த நபரின் […]
தேர்தல் கால அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை – விவசாயிகள்

தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், தற்போது நெல்லின் கொள்வனவு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தங்களது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் தெரிவித்தனர். அத்துடன், நெல்லுக்கு நியாயமான உத்தரவாத […]
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் சக்தி வாய்ந்த பட்டாசினை கொளுத்திவிட்டு தூர சென்றபோது அது வெடிக்கவில்லை. அதன்பின்னர் அவர் அருகில் சென்று வாயினால் ஊதிய போது பட்டாசு வெடித்துள்ளது. இதன்போது அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமான வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தற்போது நிலவும் மோசமான வானிலைச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும், பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பல்கலைக்கழக நிர்வாகம் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது: தங்களது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய மாணவர்கள், அவ்வாறு புறப்பட்டுச் செல்லலாம். மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல […]
வசந்த கரன்னாகொட, யோஷித்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது