யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரானார் டாக்டர்.ராகுலன்!

யாழ். நீர்வேலி மண்ணைச் சேர்ந்த டாக்டர். கந்தசாமி ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தின் இரசாயனவியல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை : நீதி அமைச்சர் பதவி விலகவேண்டும் ; தகுதியானவர்களை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதியினுடையது – சமன் ரத்னப்பிரிய

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும். இத்தகைய முக்கிய துறைகளுக்குத் தகுதியான நபர்களை நியமிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ளது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், […]
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்

முல்லைத்தீவு பழையசெம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல்விழா நேற்று(02.08.2026) இடம்பெற்றது. பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் இவ் ஆலயத்தில் நெருக்கடிகள் இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலய வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது. நேற்று காலை விசேட அபிசேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மதிய பூசை வழிபாடுகளின் பின்னர் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொங்கல்விழா பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பெருந்திரளான அடியவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை […]
விபத்தில் இரு இளைஞர்கள் பலி
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் 59 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான தமிழ்ச்செல்வன் தனேஸ் (வயது 22), வெளிநாட்டில் இருந்து வருகை தந்த அருணவன் செல்வரெத்தினம் (வயது 19) ஆகிய […]
புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் கேட்கவில்லை
புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் கேட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தமைக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஈரானுக்கு எதிரானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஈரான் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் புதிதாகத் தாக்குதல்களை நடத்துவதைத் தள்ளி வைக்குமாறு தன்னிடம் கேட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டியதைப் பொறுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். அதேபோல, ஹோர்முஸ் […]
விரைவில் ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம்

ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் வவுனியா ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் கஸ்டங்கள் தொடர்பில் எமக்கு தெரியும். ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற […]
சிறிய ரக வட்டா வட்டா வாகனம் புரண்டதில் சாரதி பலி

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த ‘அபிவிருத்தி லொத்தர்’ விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதித் தலைகீழாகப் […]
நாட்டில் சிறைச்சாலைகளில் நெரிசலை குறைக்க பேச்சு

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு […]
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை மற்றும் அதன் நீர்ப்பாசனப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கெலிஓயா நகைப் பகுதி மற்றும் மகாவலி நதியை ஒட்டியுள்ள பேராதனைப் பல்கலைக்கழக வளாகக் கட்டிடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தங்கியிருப்பவர்கள் அனைவரும் திடீர் வெள்ளப் பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நதியின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) […]
வல்வெட்டித்துறையில் வல்வைப் படுகொலை நினைவேந்தல்!

வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகரில், தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. 1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது பொதுமக்களில் 72 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட 72 பேரின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் […]