திமுக ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குள்ளான உதயநிதி ஸ்டாலினின் பேச்சு: அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

தஞ்சை: கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதைத் தவெக அரசு தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் தஞ்சையில் திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசிய கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குக் காவிரியில் […]

இளைய தலைமுறையினர் என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை கணிக்க முடியவில்லை: திருமாவளவன் வியப்பு!

மதுரை: மதுரையில் ‘ஜனநாயகம் காப்போம் 2026’ என்ற பெயரில் நடைபெற்ற மாணவர்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தற்போதைய புதிய இளைய தலைமுறையினரான ‘ஜென்-ஸி’ (Gen-Z) தலைமுறையினர் எதை விரும்புகிறார்கள், என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்கவோ, யூகிக்கவோ முடியவில்லை என்று வியந்து கூறினார். தலைவர் ஒருவர் அழைப்பு விடுக்காமலேயே, அமைப்பு ஒன்று உருவாகாமலேயே லட்சக்கணக்கில் திரளும் ஆற்றல் இந்த இளைய சமுதாயத்திற்கு […]

காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதிலடி!

ஈரோடு: காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது; அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை எனத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காவிரித் தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது எனத் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவிரி நீர் விவகாரத்தில் […]

டெல்லி சென்ற தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார்? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

சென்னை: டெல்லி சென்ற தமிழக விவசாயிகளை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழக உரிமைகள் மீது தாக்குதல் நடந்தும் தமிழக அரசு அமைதியாக இருப்பது ஏன் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் காவிரி உரிமை உள்ளிட்ட தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராடச் சென்ற விவசாயிகளை, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் […]

காவிரி விவகாரம்: முதல்-அமைச்சர் விஜய் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது? – முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனத் திமிராகப் பேசியுள்ளார் அமைச்சர் நிர்மல் குமார் என்றும், காவிரி தொடர்பாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் உறக்கம் கலைத்துத் திருவாய் மலர்வது எப்போது என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். […]

இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருக்கிறேன்: முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான் பரபரப்பு பேச்சு!

சென்னை: தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் எப்போது நடத்துவார்கள் என்று வெறியோடு காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். இவ்விழாவில் பேசிய சீமான், நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணராமல் நடிகரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டனர் என்று முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். திராவிட அரசியலுக்கு எதிரான கருத்துகளை முதலில் முன்வைத்தது நாம் […]

குழந்தை பிரசவிக்க தயாரான கர்ப்பிணி தாய் உயிரிழப்பு

களுத்துறை – வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், குறித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாதுவையை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது. எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோக செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என அறிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண […]

ஓய்வு பெறும் வயதை நீடிப்பதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கடிதம்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது எனக்கூறி மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தமக்குத் தெரிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். ​இன்று (03) மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த பின்னர், அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை, பொதுமக்களில் 3 பேர், அதிகாரி ஒருவர், 5 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்ததோடு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொலிஸாரின் அசமந்தப் போக்கை […]