கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் : ட்ரம்ப்

குள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் டொலர் (சுமார் 890 மில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது ஷொப்பிங், சுற்றுலா […]
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை!

ய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை […]
சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி – 30 பேர் காயம்

சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து கிழக்கு சிரியாவையும் தலைநகரையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையான ‘டீய்ர் அல் சூர் – டமாஸ்கஸ்’ வீதியில், அல்-சுக்னா மற்றும் பால்மைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும், மற்றொரு பேருந்தில் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்ததாக சிரிய உள்நாட்டு விவகார அமைச்சகம் […]
அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்
தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர். விடுதலை பெறமுடியாத நிலையில், […]
கிளிநொச்சியில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். நிலவிய பதற்றமான […]
மேகதாது விவகாரம்: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

ஒசூர்: மேகதாது அணையை கட்ட அனுமதி மறுக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழக பேருந்து ஒசூரிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், காவிரி ஆற்றில் எந்தவொரு கட்டுமானமும் கட்டப்படக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனினும், […]
எங்கள் மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பலாலி மக்களின் போராட்டம் தொடர்கின்றது

வலிகாமம் வடக்கு (Valikamam North) பிராந்தியத்தில் இலங்கை ராணுவத்தினரின் (Military) கட்டுப்பாட்டிலுள்ள தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, வலி. வடக்கு நிலமிழந்த சிவில் பொதுமக்கள் பலாலி சந்தியில் (Palaly Junction) இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (2026 ஜூலை 26) 6-ஆவது வாரமாகவும் தங்களது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 36 வருடங்களாகத் தங்களது பரம்பரை நிலங்களை இழந்து, சொந்த வீடுகளின்றி நலன்புரி முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் இப் பொதுமக்கள், ராணுவத்தினரின் […]
ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

தமிழில் றாப் இசையை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய பிறகு, திரைப்பட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றியுடன் வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகி வரும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவிக்கும் வகையில் பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ஹிப் ஹொப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா ஆதி, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே ஆச்சார், கேட்டிகா சர்மா உள்ளிட்ட பலர் […]
‘மாஸ்டர் பிளான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக நடிகர் தருண் விஜய் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான எஸ். ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தில் தருண் விஜய், அக்ஷரா ரெட்டி, பவெல் நவகீதன், மனோ செல்வராஜ், ராஜேஷ் கிறிஸ்டி, பி. எல். தேனப்பன், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். பழனி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜே அலி மிர்ஸாக் […]
குழந்தை நட்சத்திரம் தீஹான் நடிக்கும் ஃப்ளாக்- Flag

‘கொட்டுக்காளி’, ‘இட்லிக்கடை’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் தீஹான் முதன்மையான தேடத்தில் நடித்திருக்கும் ஃப்ளாக் – Flag திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ். பி. பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ளாக்- Flag திரைப்படத்தில் தீஹான், மிக்கி மக்கி ஜா, அபினவ் கோஸ்வாமி, ஆனந்த், பப்புஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பி. பொன் சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். […]