அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு […]
138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, அந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23% ஆகும். அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர். மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை […]
தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார். கொழும்பில் சனிக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரசாங்கமானது தேர்தல்களை நடத்தாமல் வெறும் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து காலத்தைக் கடத்தி வருகின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் காணப்படும் 159 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மை பலம் என்பது […]
யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!
வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார். நேற்று மாலை வேளையில் ஆமின் அவர்கள் தனது வழக்கமான நாளாந்தப் பணிகளுக்காக சென்று திரும்பிய போதே, கிராமத்திற்குள் ஊடுருவியிருந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். யானை எதிர்பாராதவிதமாக அவரைத் தாக்கியதில் அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் […]
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கல்வித் துறையில் 40000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. […]
யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள ஊடகக் கேள்விகளுக்குத் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிலுள்ள புனித பௌத்த […]
ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் வைத்திய நிபுணர் சத்யா ஹேரத் இடம்பெற்றுள்ளார். ஜூலை 28 ஆம் திகதி உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இப்பட்டியலில், விழிப்புணர்வு, கொள்கை உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் சேவை ஆற்றிய உலகின் நால்வரில் ஒருவராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் தெற்றுஏற்படும் அபாயமுள்ள குழுக்களிடையே ஹெபடைடிஸ் […]
த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது :- த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் […]
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். […]
இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல படுகொலைகள் இடம்பெற்றன, அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகின்றார்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2026) நடைபெற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், […]