அறிமுக நடிகர் தருண் விஜய் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான எஸ். ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தில் தருண் விஜய், அக்ஷரா ரெட்டி, பவெல் நவகீதன், மனோ செல்வராஜ், ராஜேஷ் கிறிஸ்டி, பி. எல். தேனப்பன், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. எஸ். பழனி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜே அலி மிர்ஸாக் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் – டிஜே இன்டர்நேஷனல் – தியா ஃபிலிம்ஸ்- ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில்.. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குடும்பத்தினர் ஆகாயத்தை பார்த்து தீபமேற்றி வழிபடுவது போல் காட்சி இடம் பிடித்திருப்பது… ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது.