ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் ‘சிட்டுக்குறிஞ்சி’

‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும்… சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரஜித் மேனன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிட்டுக்குறிஞ்சி ‘ திரைப்படம் – ரொமான்டிக் ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகி வருகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌ அறிமுக இயக்குநர் வி. ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தில் ரஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி ஜே பப்பு, […]

ஹூதி கிளா்ச்சியாளா்கள் சவூதி எண்ணெய் நிலையங்கSf;F வான்வழித் தாக்குதல்

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் நேற்று (25) வான்வழித் தாக்குதல்களை நடத்தினா். செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மண்டேப் நீரிணை வழியே சவூதி தொடா்புடைய கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக ஹூதிக்கள் கடந்த திங்கள்கிழமை அறிவித்தனா். தொடா்ந்து, சவூதி எண்ணெய்யுடன் செங்கடல் வழியாக பயணித்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். உலகளாவிய கடல்வழி வா்த்தகத்தில் […]

போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

ட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற கோர விபத்து – இளைஞர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதான வீதியில், குழந்தையேசு ஆலயத்திற்கு அருகில் நேற்று (25.07.2026) இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில், புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதில் ஒருவர் அதிசீவிர சிகிச்சை பிரிவிலே அனுமதிக்கப்பட்டுள்ளார் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாக பயணித்த நிலையில் குழந்தை இயேசு சாந்தியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார […]

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு இடையூறு விளைவித்த கற்றாழை நிறுவன பணியாளர்கள்!

வனவளத்திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த 9 கற்றாழை நிறுவன பணியாளர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். நேற்றுமுன்தினம்(24)கிளிநொச்சி அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பகுதியில் கற்றாழை செய்கை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கும் கிராமிய இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியிருந்தது. இந்தநிலையில் குறித்த பகுதிக்கு வனவளத்திணைக்களத்தினரும் சென்றிருந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். […]

சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுப் பொய்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக ஆளும் கட்சியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த, தைரியமிருந்தால் இக்குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் கூறுமாறும் சவால் விடுத்தார். கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் […]

பிரான்ஸ் – ஸ்பெயினில் காட்டுத் தீ

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ் சர்வதேச உதவியைக் கோரியுள்ள நிலையில், ஸ்பெயின் தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. பிரான்சின் போர்டோ மற்றும் கேப் ஃபெரட் உள்ளிட்ட தென்மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ அதிவேகமாகப் பரவி வருகிறது. கிரோண்டே மற்றும் லேண்டெஸ் பிராந்தியங்களில் இருந்து இதுவரை […]

யாழில் கறுப்பு ஜுலை நினைவேந்தல்!

983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நேற்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் நினைவுரைகள் இடம்பெற்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், […]

36 நாட்கள் மேலாகக் கடலில் தத்தளித்து உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்!

36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar), மஹேஷ்காலிப் பகுதியில் உள்ள மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி இரவு 10:00 மணியளவில் வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த போதே பங்களாதேஷ் மீனவர்களால் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பங்களாதேஷ் மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு மஹேஷ்காலி கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் […]