வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புள்ளவர்கள் தனுஷ்கோடியில் கைதானவர்கள்?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இரு இலங்கையர்களை இந்தியக் கடலோரப் பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வத்தளைப் […]

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகையில்? – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகப் செய்தி வெளியானது குறித்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விளக்கமளித்துள்ளது. அத்துடன், குறித்த ஆண்டின் போது ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் […]

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

பெல்லன்வில பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும் தொடர்ந்து பேணிக்கொண்டே, இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு […]