கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை தொல்லியல் திணைக்களம் மாற்றி அமைப்பது பேரதிர்ச்சி தருகிறது.- ஆறு.திருமுருகன் Aaruthirumurugan வேதனை!

கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றி அமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகின்றோம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கன்னியா வெந்நீரூற்று தொடர்பான செய்தி சைவத் தமிழ் மக்களுக்குப் பேரதிர்ச்சியை தருவதாகும். கன்னியா வெந்நீரூற்றில் இருந்த விநாயகர் ஆலயம், சிவனாலயம், சிவனடியார் மடம் ஆகியன அழிக்கப்பட்டு, தொல்லியல் திணைக்களம் […]

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டம்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த விசேட கூட்டமானது இன்று பிற்பகலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆதரவை பெறுவது மற்றும் தற்போதைய அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்கூட்டியே தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள எல் நினோ

முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுற்றாடல் துறை அமைச்சர், ‘எல் நினோ’வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். அத்துடன், ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் […]

பேருந்தை செலுத்தியவாறே சாரதி உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழில் தனியார் பேருந்தை செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதான முருகேசு ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தனியார் பேருந்து, புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளது. அதன்போது அந்த பேருந்தில் 60 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தானது வேலணை – அராலி சந்தியால் பயணித்துக் கொண்டிருந்தபோது சாரதி ஆசனத்தில் சாய்ந்தபடியே மயக்கமுற்றுள்ளார். இதன்போது பேருந்து அவ்வாறே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளதாக […]

வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை

நான் பதவிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அல்ல என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியா – தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுக்கையில், வவுனியா – தெற்கு தமிழ் பிரதேச சபையினுடைய செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை பெற்று சமூக வலைத்தளங்களில் சில ஊடகங்கள் தவறான […]

சுரேஷ் சலேவுக்கு அறுவை சிகிச்சை!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொ்ளளப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 7ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே […]

செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடம் உறவினர்கள் கவனயீர்ப்பு: தமிழர்கள் இனப்படுகொலைக்கு (Genocide) உட்படுத்தப்பட்டதை அங்கீகரித்து சர்வதேச விசாரணைக்கு வழிசெய்க — உள்நாட்டுப் பொறிமுறைகளை நிராகரித்து ஐ.ஒ.விடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம், ஜூலை 23: இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு (Genocide) உட்படுத்தப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் (EU) உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை (International Investigation Mechanism) உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழித் தளத்திற்கு புதன்கிழமை (ஜூலை 22) விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவை நேரில் சந்தித்த வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பினர், இக் […]

செம்மணி அகழ்வாய்வுக்கு உதவுமாறு கனேடிய அரசுக்கு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு!

இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகளுக்கும் விசாரணைகளுக்கும் கனடா தனது உலகத்தரம் வாய்ந்த தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ அனிதா ஆனந்த் அவர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. இப்பிரதேசத்தில் நிலையான பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மனித உரிமைகள் சார்ந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டி, காலவிரயமின்றி நிகழவேண்டிய அகழ்வாராய்வுகளுக்கு கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான திணைக்களம் தீவிர ஆதரவளிக்க […]

சுகாதார ஊழியருக்கு மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் நேற்று (22) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பினால் சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டானது நியாயமான சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதன்படி, ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்படும் திகதி மற்றும் நேரத்தில், சிறைச்சாலை ஒன்றிற்குள் பிரதிவாதியின் உயிர் பிரியும் வரை […]

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஈரானின் உட்கட்டமைப்புகள் தாக்கி அழிக்கப்படும் – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவுள்ளதாக அவர் மீண்டும் எச்சரித்துள்ளார். இரு தரப்பிலும் பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனிமேல், […]