செம்மணி அகழ்வாய்வுக்கு உதவுமாறு கனேடிய அரசுக்கு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு!

இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகளுக்கும் விசாரணைகளுக்கும் கனடா தனது உலகத்தரம் வாய்ந்த தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க வேண்டும் என்று கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ அனிதா ஆனந்த் அவர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்பிரதேசத்தில் நிலையான பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் மனித உரிமைகள் சார்ந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டி, காலவிரயமின்றி நிகழவேண்டிய அகழ்வாராய்வுகளுக்கு கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான திணைக்களம் தீவிர ஆதரவளிக்க வேண்டும் என பேரவை வலியுறுத்துகிறது.

தடயவியல், தொல்லியல், மானிடவியல் ஆகிய துறைகளில் கனடா மிகவும் முன்னேற்றமடைந்த பன்முகத்திறன்களைக் கொண்டுள்ளதையும், இவை முன்னாள் பூர்வகுடி குடியிருப்புப் பள்ளித் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகள் மூலம் மேம்படுத்தப்பட்டிருந்ததையும் இந்த வேண்டுகோள் சுட்டிக்காட்டியது.

செம்மணியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகளில் தடயவியல் நேர்மையைப் பேணுவதற்கு இந்த அதிநவீன அறிவியல் முறைகள் பொருத்தமானதும் அவசியமானதுமான கருவிகள் என்பதைப் பேரவை சுட்டிக்காட்டியது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு ஒன்று இந்தத் தளத்தைப் பார்வையிட அனுமதி பெற்றதன் மூலம் இந்த சூழ்நிலையின் அவசரம் மேலும் உணர்த்தப்படுகிறது. இது சுயாதீனமான உலகளாவிய அறிவியல் மேற்பார்வையினதும் சிறப்பு கண்காணிப்பாளர்களினதும் முக்கிய மற்றும் உடனடித் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

“செம்மணியில் புதைந்துள்ள உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதற்கான தார்மீகப் பொறுப்பையும் தனித்துவமான அறிவியல் நிபுணத்துவத்தையும் கனடா கொண்டுள்ளது.” என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் ஸ்ரீதரன் துரைராஜா தெரிவித்தார். “நமது நாட்டின் மேம்பட்ட தடயவியல் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தளத்தின் சீர்குலைவைத் தடுக்கத் தேவையான நடுநிலையான மேற்பார்வையை வழங்க முடியும். இது துயரில் ஆழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் ஆறுதலை நோக்கிய ஒரு பாதையைத் திறக்கும்;.”

இருதரப்பு வழிமுறைகள், அனைத்துலக அமைப்புகள், அல்லது சுயாதீன ஆலோசனை வழங்கல் மூலமாக கனடாவின் பங்களிப்பு இருப்பது, ஆதாரங்களைப் பாதுகாக்கும் என்றும், அகழ்வாய்வைக் கடுமையான சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுடன் சீரமைக்கும் என்றும் பேரவை நம்புகிறது.

ஊடகத் தொடர்புகனடியத் தமிழர் பேரவை (CTC)

மின்னஞ்சல்: info@canadiantamilcongress@ca

தொலைபேசி: 416-240-0078

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக