திடீர் சுற்றிவளைப்பு; தங்கம் மற்றும் பணத்துடன் 10 பேர் கைது

மடவளையில் உள்ள விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 3.930 கிலோகிராம் தங்கத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தேகம பொலிஸாரினால் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதானவர்களில் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெரஹரா ஊர்வலம்; காவடி ஆடுவதால் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கிச் சூடு

மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, தற்போது துப்பாக்கிச் சூடு வரை தீவிரமடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னரே இந்த தகவல் வௌியாகியுள்ளது. தெஹிபாலே மல்லி’ மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட குற்றவாளிகளே இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வாறான […]

மன்னார் கடற்பரப்பில் 9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 […]

செங்கடலில் பயணித்த 2 சவூதி கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டலில் ஈரானின் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்தும் […]

டொராண்டோவில் இஸ்ரேலிய மற்றும் யூத மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய நபர் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது

டொராண்டோ, ஜூலை 23: கனடாவின் டொராண்டோ நகரில் 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களின் போது இஸ்ரேலிய மற்றும் யூத சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட 33 வயதுடைய நபர் ஒருவர், பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 2024 மே 25 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய திகதிகளில் டொராண்டோவின் பே (Bay) மற்றும் ஃப்ரண்ட் (Front) வீதிப் பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி […]

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முற்பட்ட 2 சிறுவர்கள் பலி

தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது. அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனடாவில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு: 6 பேர் கைது — $66,000 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

கனடாவின் யோர்க் பிராந்தியம் (York Region) மற்றும் பெருநகர டொராண்டோ பகுதிகளில் (GTA) நீண்டகாலமாகச் இடம்பெற்று வந்த கொகேன் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதத் துப்பாக்கிக் கடத்தல் வலையமைப்பைப் பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். யோர்க் பிராந்திய பொலிஸாரால் (York Regional Police) முன்னெடுக்கப்பட்ட ‘புரொஜெக்ட் பிளேட்’ (Project Blade) எனும் விசேட புலனாய்வு நடவடிக்கையின் மூலம் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீண்டகால விசாரணையும் பறிமுதலையும்: 2025ஆம் ஆண்டு யோர்க் […]

இணையவழி சிறுவர் பாலியல் சுரண்டல்: ஒன்டாரியோ மாகாணம் தழுவிய விசேட நடவடிக்கையில் 63 பேர் கைது — 213 குற்றச்சாட்டுகள் பதிவு!

இணையவழி ஊடாகச் சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல் மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமைப் பொருட்களைத் தயாரித்தல், வைத்திருத்தல், விநியோகித்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் (OPP) ‘புரொஜெக்ட் டைம்’ (Project Time) எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப் பரந்த அளவிலான நடவடிக்கையின் மூலம், 51 சிறுவர்கள் குற்றவாளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து […]

கறுப்புயூலை – 23 கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழரின் நினைவை விட்டு என்றும் அகலாத தமிழின அழிப்பு நாட்கள். இனக்கலவரம் என்ற பெயரில் நடாத்திய மாபெரும் தமிழினப்பின் 43 ஆண்டுகள் இன்று செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டு இதுவரை கண்டெடுக்கப்பட்ட 448 உயிரற்ற பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை நீதிகேட்டு நிற்கின்றனர். அதற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்! 1983 ல் சிறையிலிருந்த அப்பாவி அரசியல் கைதிகள் முதல் சிங்கள இனத்துடன் சகோதரத்துவத்துடன் சேர்ந்து அறத்தோடு வாழ்ந்த தமிழ்மக்கள் 1983 யூலை 23,24,25 இந்த நாட்களில் இனக்கலவரம் என்ற […]

நயாகரா நீர்வீழ்ச்சி படுகொலை வழக்கு: கனடா தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் 3ஆவது வாகனமும் மீட்பு — தப்பியோடிய குற்றவாளிகளுக்குத் தீவிர தேடுதல்!

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் பயன்படுத்திய மூன்றாவது வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர். எனினும், கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள இரு பிரதான சந்தேகநபர்களும் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர். கடந்த ஜூலை 16ஆம் திகதி இரவு 9:00 மணியளவில் தொரோல்ட் ஸ்டோன் வீதியிலுள்ள (Thorold Stone Road) வீடொன்றிற்குள் புகுந்த இரு நபர்கள், அங்கிருந்த நபர் ஒருவர் மீது கைத்துப்பாக்கியால் சரமாரியாகச் […]