ஆறாத வடு ’கருப்பு ஜூலை’ ; இலங்கை பாராளுமன்றத்தில் நினைவுகூர்வு

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்து 43 ஆண்டுகள் இன்று (2026 ஜூலை 23), கடந்துவிட்டன. இந்நாளினை, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூர்ந்தனர். கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும் எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து ரூ. 90 கோடிக்கு மேல் வருவாய்

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒரு சுவாரஸ்யமான மற்றும் வியக்கத்தக்க விற்பனை நிகழ்வு அரங்கேறியுள்ளது. இப்போட்டி நடைபெற்ற நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தின் (MetLife Stadium) அசல் புல்வெளியே, நினைவுப் பொருளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் புல்வெளியானது, சிறப்புத் தொழில்நுட்பத்துடன் கூடிய அக்ரிலிக் கண்ணாடிப்பெட்டி மற்றும் USB சான்றிதழுடன் சேர்த்துப் பொதி செய்யப்பட்டு, $450 (இந்திய மதிப்பில் சுமார் ₹37,500) முதல் $3,000 வரையிலான விலையில் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் மனு — மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளின் போது, தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த நீதிப் பேராணை மனு (Writ Petition) இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மேன்முறையீட்டு […]

 தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு  

2022 ஆம் ஆண்டு ‘ அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அநுருத்த பண்டார என்ற குறித்த இளைஞனால் தாக்கல் […]

பாரவூர்தி விபத்து: சாரதியும் நடத்துனரும் படுகாயம்

தலைநகர் கொழும்பில் இருந்து மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குப் பொருட்களை ஏற்றி வந்த பாரவூர்தி ஒன்று நேற்று (22) இரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு – ஹட்டன் பிரதான சாலையில், மல்லியப்புப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மண் திட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதியும் நடத்துனரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் […]

நாடளாவிய ரீதியில் 79000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (22) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,676 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக […]

உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய மனு பரிசீலனையின்றி நிராகரிப்பு

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது. இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடொன்றில் துப்பாக்கி கண்டுபிடிப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் […]

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை

புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார். சுற்றாடல் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட […]

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சபாநாயகர் இடைநிறுத்தம் செய்ய வேண்டும்: சபைத் தலைவர் பிமால் ரத்நாயக்க சபையில் வலியுறுத்தல் —

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாக (Standing Orders) நடந்து கொள்வதால், அவரை நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து இடைநிறுத்தம் (Suspension) செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபைத் தலைவர் பிமால் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய சபைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மனநலப் பாதிப்பினால் அவதியுற்று வருவதாகத் தெரிவித்ததுடன், அவரது அவைக்குப் பொருத்தமற்ற மற்றும் அநாகரீகமான நடத்தைகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் […]