019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளின் போது, தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த நீதிப் பேராணை மனு (Writ Petition) இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த ஜூலை 9ஆம் திகதி நான்காவது நாளாகவும் இம் மனு பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகள் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் பின்னணி:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டு, தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை (Foreign Travel Ban) அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இப் பேராணை மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இவ் வழக்கின் மேலதிகப் பரிசீலனைகள் நீதிமன்றத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.