எல்லை தாண்டிய புலனாய்வு விசாரணையில் $139 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கனடா மற்றும் அமெரிக்க பொலிஸார் மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர் நிலையங்கள் இணைந்து நடத்திய எல்லை தாண்டிய கூட்டு புலனாய்வு விசாரணையில், சுமார் 1.7 தொன் சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ‘புராஜெக்ட் பே’ (Project Bay) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஒன்ராறியோ (Ontario) மாகாண வரலாற்றிலேயே ஒரே விசாரணையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு $139 மில்லியனுக்கும் அதிகம் (கனடிய டொலர்கள்) […]
டெல்லியில் பற்றிய நெருப்பு: தமிழ்நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள நீட் எதிர்ப்பு போராட்டம்

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, மதுரை, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லம், மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் […]
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘மன்னர் வகையறா’ படத் தயாரிப்புக்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் பெறப்பட்ட ரூ. 4.5 கோடி கடன் விவகாரத்தில் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்த்தி இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார். ஃபைனான்சியர் கோபிக்கு வழங்கப்பட்ட காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதை அடுத்து தொடரப்பட்ட இந்த […]
43வது கருப்பு ஜூலை நினைவு நாள்: தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மனவேதனையுடன் அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்தனர்

1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலைகளில் உயிரிழந்த அப்பாவி தமிழ் மக்களின் நினைவாக, 43வது கருப்பு ஜூலை நினைவு நாள் இன்று பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆழ்ந்த மனவேதனையுடனும், மரியாதையுடனும் நினைவுகூரப்பட்டது.
தொல்பொருள் ஆணையாளரையும் அரசாங்க அதிபரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு.

2020 ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் புத்த விகாரை அமைக்கும் பொருட்டு அடிக்கல் நாட்டிய விடயம் தொடர்பாக, 2026.08.03 அன்று திருகோணமலை மாவட்ட தொல்பொருள் துறை ஆணையாளரையும் அரசாங்க அதிபரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
1983 கறுப்பு ஜீலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்-பொ.ஐங்கரநேசன்

ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இன *க் *கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983 ஜீலையில் படு* கொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும். இது இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல;இது ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027 ஜீலைக்கு முன்னதாகவாவது 1983 இன*க்*கலவரத்தில் […]
விசாரணை கைதி மரணம்- தூத்துக்குடி காவல்துறை விளக்கம்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி அருணாச்சலம் (24) உயிரிழந்த விவகாரத்தில், மாவட்டக் காவல்துறை விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி தெற்கு காவல் நிலையப் போலீசாரால் கைது செய்யப்பட்ட அருணாச்சலத்திற்கு அனைத்துச் சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாகக் கடைபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையின்போது அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். காவல் நிலைய லாக்-அப்பில் மற்ற கைதிகளுடன் […]
எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது; ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அரண் ஆகுதலே இத்தீவின் நல்லிணக்கம் – ரவிகரன் எம்.பி

இந்தநாட்டில் அகிம்சைவழியில் உரிமைக்குரல் உயரும்போதெல்லாம் அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்கள்மீதான அடக்குமுறைகள் இனக்கலவரங்களாகத் தொடர்ந்ததாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறாக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாலேயே தமிழர்கள் சமஷ்டியையும், தனி ஈழத்தையும் கோரவேண்டியநிலை ஏற்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே ஆட்சியாளர்கள், இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான ஈழத் தமிழர்களுக்கு அரணாகுவதால் மாத்திரமே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்துகாணால் ஆக்கப்பட்டோர் விவகாரம், முள்ளிவாய்க்கால் […]
கன்னியாவில் புதிதாக எதுவும் கட்டவில்லை ; தொல்பொருள்கள், நினைவிடங்களைப் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டன – தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்களைப் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வீதி ஒன்றின் பெயர்ப்பலகையை திரைநீக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம், கன்னியா பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கட்டட பணிகள் தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி ஒரு […]
பிராம்ப்டன் துப்பாக்கிச்சூடு சம்பவம்: பெரும் குற்றப்பிரிவு விசாரணை

பிராம்ப்டனில் உள்ள டிக்சி ரோடு (Dixie Road) மற்றும் லிசா ஸ்ட்ரீட் (Lisa Street) பகுதிக்கு அருகே 21 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார். தீவிர காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு தாமதமாக பிராம்ப்டனில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ‘பெரும் குற்றப்பிரிவு’ (Major Crime Unit) விசாரணை நடத்தி வருவதாக பீல் (Peel) காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இரவு சுமார் 9:10 மணியளவில் டிக்சி ரோடு மற்றும் […]