ரகித, சரித் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி […]

சுரேஷ் சலே வழக்கு – இடையீட்டு மனுக்கள் விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதற்கும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் சவால் விடுத்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை விசாரணை செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய எதிர்வரும் ஒகஸ்ட் 4ஆம் திகதி குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வழக்கில் பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 8 தரப்பினர் […]

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: மாலபே பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியாவிலுள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (CEBH) அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே […]

‘ட்ரம்பைக் கொல்வோம்’ ஈரானில் அதிர்வலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, “We Will Kill Trump” (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், […]

பேருந்து – டிப்பர் லொறி மோதி விபத்து: 20 பேர் காயம்

பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்து ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் இரு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்துள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த […]

மின்னல் அபாயம் 48 வீதம் அதிகரிப்பு

மொரட்டுவை, கட்டுபெத்தையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் “மின்னல் பாதுகாப்பு மற்றும் மின்னல் அபாயங்களிலிருந்து உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறையும் அதில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவும் நேற்று (16) வியாழக்கிழமை மாலை (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்றான மின்னல் தாக்கமானது, மனித உயிர்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு அமைப்புகள், மின்சாரக் […]

கைது செய்யப்பட்ட ரகித, சரித், அருண நீதிமன்றத்தில் முன்னிலை

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் முற்பணமாக 1200 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரகித ராஜபக்‌ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருண ஆகியோர் இன்று (17) இரண்டாவது முறையாக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் […]

பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் கொலை வழக்கு ; முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நால்வரின் விளக்கமறியல் 30 வரை நீடிப்பு

நுவரெலியாவில் பெண் உடற்பயிற்சி சிகிச்சை வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (16) வியாழக்கிழமை  நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, வழக்கின் சாட்சியங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த நீதவான், […]

செம்மணி குற்றவாளி சோமராத்னவால் ஈ.பி.டி.பியின் களங்கம் போய்விட்டது!

செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ அண்மையில் தெரிவித்த கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சேறு பூசியவர்களுக்கு பதில் வழங்குவதாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]

முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

அறிமுக சந்திப்பொன்றின் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.