கொழும்பு பங்குச்சந்தை சரிவு

கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய (17) வர்த்தகச் செயற்பாடுகள், கடந்த 15 மாதங்களில் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வை (Turnover)பதிவு செய்துள்ளன. இதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் அதன் தினசரிப் புரள்வு 722 மில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இந்தப் புரள்வானது, கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த தினசரிப் புரள்வாகக் கருதப்படுவதுடன், அன்றைய தினம் 792 மில்லியன் ரூபா புரள்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்றைய தினத்திற்குள் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) […]
எரங்க குணசேகர மற்றும் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட அறுவருக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சட்டவிரோதக் கூட்டமொன்றில் உறுப்பினர்களாக இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்கு அமைய, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர்கள் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நகர அபிவிருத்தி […]
ஊழல் மற்றும் மோசடி; ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரோசி சேனாநாயக்க

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க இன்று (17) முற்பகல் ஆஜராகியுள்ளார். தனது மேயர் பதவிக் காலத்தின் போது, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில், அரச நிறுவனமான சதொச ஊடாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் தேவையுடைய மக்களுக்குமான உணவு வவுச்சர்களை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து விசாரிப்பதற்காகவே தாம் அழைக்கப்பட்டிருந்ததாக […]
பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி: திமுக விமர்சனம்

சென்னை: பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் த.வெ.க. அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அமைச்சர்களின் விளக்கங்கள் ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், இதில் திட்டமிட்ட சதி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். கொடைக்கானல் சார் பதிவாளரை வரவழைத்துப் பதிவு செய்தது, பொருளாதார வசதியற்றவர்களைக் கொண்டு நிலப் பரிவர்த்தனை செய்தது எனப் பல சந்தேகங்களை அவர் எழுப்பினார். நிலப்பதிவை அரசு ரத்து செய்யவில்லை, நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்தது என்று கூறிய பரந்தாமன், […]
QR முறைமை நீக்கப்படுமா? வௌியானது புதிய அறிவிப்பு

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மாத்திரமன்றி டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் மத்திய கிழக்கில் யுத்த நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் […]
பிள்ளையான் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகள் குறித்து சாணக்கியன் கருத்து

பிள்ளையான் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகள் – இன்றைய விசேட கூட்டத்தில் சுட்டிக்காட்டினார் சாணக்கியன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேனதுரை சந்திரகாந்தன் பிள்ளையானால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன். இக் […]
நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்-வடக்கு மாகாண ஆளுநர்

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் இன்று […]
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் […]
உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு

உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், அறிவிக்கப்படாத காரணங்களால் அந்நாட்டின் அரசுக்குள் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் யூலியா ஸ்விரைடென்கோ கடந்த செவ்வாய்க் கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்தார். மேலும், சில முக்கிய அமைச்சர்களும் பதவி விலகினர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் அரசின் எண்ணெய் […]
யாழ் வலி வடக்கில் 6 ஆயிரம் ஏக்கரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்த வர்த்தமானியை நீக்கு

2013ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டு, வலி வடக்கு மக்களின் சுமார் 6,000 ஏக்கர் காணிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்த வர்த்தமானியை உடனடியாக நீக்க வேண்டும் என சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மயிலிட்டியில் 13ஆவது வாரமாக நடைபெற்ற காணி விடுவிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அவர், முக்கிய கருத்துகளாக பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: மக்களின் காணிகள் மக்களுக்கே என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், […]