நான் சண்டியன் அல்ல ; சாமானியன் ; இது அநுர அரசாங்கம், இங்கு மோசடிகளுக்கு இடம் இல்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17) […]
நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு: தப்பியோடிய இரு சந்தேக நபர்களைத் தேடும் கொலைக் குற்றப்பிரிவு பொலிஸார்

நயாகரா நீர்வீழ்ச்சி (Niagara Falls) நகரில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நயாகரா பிராந்திய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொலிஸாரின் தகவல்படி, வியாழக்கிழமை இரவு 8:50 மணியளவில் நயாகரா நீர்வீழ்ச்சி நகரின் ‘தொரோல்ட் ஸ்டோன்’ வீதி (Thorold Stone Road) மற்றும் ‘டோர்செஸ்டர்’ வீதிக்கு (Dorchester Road) அருகிலுள்ள இல்லம் ஒன்றிற்கு வந்த இரு சந்தேக நபர்கள், அங்குள்ள ஒரு ஆண் […]
விராலிமலை இடைத்தேர்தலில் துரோகிகளை வெற்றிபெற விடக்கூடாது- எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், விராலிமலை இடைத்தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கர் த.வெ.க.-வில் இணைந்ததைக் குறிப்பிட்ட அவர், துரோகிகளைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க அறிவுறுத்திய அவர், விசுவாசமான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு ஆளும் கட்சிக்குத் தாவியவர்களைப் பற்றிக் […]
நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு பறவைக் காய்ச்சல்

நியூசிலாந்தில் முதன்முறையாக புலம்பெயராது அங்குள்ள காடுகளில் வாழும் உள்நாட்டுப் பறவை ஒன்றிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய H5N1 ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் முதல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட சில நாட்களிலேயே இந்த இரண்டாவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வட தீவில் உள்ள வைராடப்பா பிராந்தியத்தில், உள்ளூர் மக்களால் ‘காஹு’ என்று அழைக்கப்படும் ‘ஸ்வாம்ப் ஹாரியர் ஹாக்’ வகை பருந்து ஒன்றுக்கே இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உயிரியல் பாதுகாப்பு […]
பிரித்தானிய அரசியலில் புதிய திருப்பம் தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம்!

பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவராக, ‘வடக்கின் ராஜா’ என அன்போடு அழைக்கப்படும் அண்டி பர்ன்ஹாம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை (20) அவர் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு தசாப்த காலத்தில் பிரித்தானியா காணப்போகும் 7 ஆவது பிரதமர் இவராவார். தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு சரிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியதைத் தொடர்ந்தே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 56 […]
முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை இந்தியாவில் ஆரம்பம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று (17) வெள்ளிக்கிழமை ஹரியானாவில் அந்நாட்டுப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவங்கி வைத்தார். நிலக்கரி, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ஹைட்ரஜன்’ ரயில்களை இயக்க, இந்திய ரயில் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த ரயில், ரயில் திணைக்களத்திடம் […]
வாக்குறுதியை அரசு மீறிவிட்டது; மன்னாரில் கனிம மணல் அகழ்வு!

மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) கைத்தொழில் அமைச்சிடம் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் கற்றாலைத் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடிய போது, […]
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,025 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,700 ஆக […]
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.
வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14.5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா […]