‘ஜனநாயகன்’ பட வெளியீடு பற்றிப் புதிய தகவல்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தைப் பற்றிய புதிய தகவலை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறது. இயக்குநர் ஹெச் .வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பொபி தியோல், மமீதா பைஜூ , கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பொலிடிக்கல் எக்சன் […]

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ்.ஜானகி: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழ் அஞ்சலி

இந்திய திரையுலகின் மகத்தான பாடகராக அறியப்படும் எஸ்.ஜானகி, நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மைசூருவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதி சடங்கு மைசூரு நகரை அடுத்துள்ள கனியனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் நடைபெறுகிறது. அதற்கான பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை கர்நாடக […]

நீர்கொழும்பு சிறை வன்முறை: மனிதப் படுகொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு

நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலையில் 8 சிறைச்சாலை அதிகாரிகளை சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இக்கொடூரக் கொலைகளுடன் தொடர்புடைய சுமார் 75 […]

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த […]

ஓரணியில் ரணில் – சஜித்?

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டமை தான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. எனவே, எதிர்கால அரசியல் தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக […]

சொத்து மோசடி; அரசியல்வாதிகள் உள்ளிட்ட 500 பேர் தொடர்பில் விசாரணை

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. […]

வவுனியாவில் போலி நாணய தாள்களை வைத்திருந்தவருக்கு சிறை

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது. இதன்போது சந்தேக நபருக்கு எதிரான […]

மருத்துவ பீட மாணவி காதலனுக்காக போதைப்பொருள் கடத்தினார்?

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவரின் முகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், “இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் சிறையில் இருக்கிறார்” என்ற கேள்வி பலரும் எழுப்பி வந்தனர். குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த […]

தந்தை அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி – மகன் மொஜ்தபா கமேனி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் மறைவிற்குப் பழிவாங்குவது உறுதி என அவரது மகனும், தற்போதைய உயர் தலைவருமான மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “கமேனி மற்றும் தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது அல்ல, அது தவிர்க்க முடியாத வகையில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மஷ்ஹத் நகரில் நடைபெற்ற அலி கமேனியின் இறுதிச்சடங்கில் […]

நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொல்லுகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் போது, கைதிகள் சிறைச்சாலை சமையலறைக்குள் புகுந்து அங்கிருந்த தேங்காய்களையும் எடுத்து வந்து அதிகாரிகளைத் தாக்கியது தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள நிலையில், […]