பங்களாதேஷில் கனமழை; 44 பேர் பலி – 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டோகிராம், காக்ஸ் பஜார், பண்டர்பன் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.6 இலட்சம் குடும்பங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு, 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து துண்டிப்பு, மின்சாரமின்மை போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ள சூழலில், இராணுவம் மற்றும் கடற்படையினர் படகுகள் […]
பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் ‘ஈழம் சாவடி 2026’

கனடாவில் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘ஈழம் சாவடி 2026’ நிகழ்வு மூன்று தினங்களுக்கு (10.07.2026, 11.07.2026 மற்றும் 12.07.2026) சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ‘பிரம்டன் கரப்ரம் ஈழம் சாவடி 2026’ தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடும் அழகிய கலைத் திருவிழா. பெரும் திரளான மக்கள் கூட்டமும், அருமையான நடனம், இசை மற்றும் சுவையான பாரம்பரிய உணவுகள் என ‘ஈழம் சாவடி 2026′ விழாக்கோலம் பூண்டுள்ளது. மேற்படி கரப்ரம் பல்கலாசார […]
‘பா.ஜ.க. என்றால் பயமா… ஆமாம் பாம்பை பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’ – நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி

சென்னை: பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்களுக்குப் பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, பா.ஜ.க. குறித்த தனது விமர்சனத்தை பாம்புடன் ஒப்பிட்டு ஆவேசமாகப் பேசியுள்ளார். பிரதமர் மோடியைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்ற நயினார் நாகேந்திரனின் கூற்றுக்கு, பாம்பைக் கண்டால் யாரும் பயப்படத்தான் செய்வார்கள் என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக நீதித்துறையில் தனது சுதந்திரமான செயல்பாடு குறித்து எழுந்த கேள்விக்கு, முதலமைச்சர் விஜய் தனக்கு முழுமையான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார். […]
அரசியல் ரீதியாக எந்த சமாதானத்தையும் முதலமைச்சர் பாஜகவோடு செய்து கொள்ள மாட்டார் – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

மதுரை: மதுரையில் நடைபெற்ற த.வெ.க. இணைப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.-வுடன் எந்த சமாதானத்தையும் முதலமைச்சர் விஜய் செய்து கொள்ள மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறினார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கொள்கையற்ற கூட்டணியில் இணைந்து பயணிக்கத் தயாராகிவிட்டதாகக் கூறிய அவர், மக்கள் ஆதரவு த.வெ.க.-விற்கு அமோகமாக உள்ளது என்றார். திருமாவளவனின் கூட்டணி யோசனை குறித்த கேள்விக்கு, எதிர்க்க வேண்டிய இடத்தில் எந்த மத்திய அரசு இருந்தாலும், […]
‘கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று திமுக அறிவித்திருந்தால்…’ திருமாவளவன் பேட்டி

சென்னை: வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. கூட்டணி சந்தித்த பின்னடைவுகளுக்கு அந்தத் தலைமையின் அணுகுமுறையே காரணம் என்று விமர்சித்துள்ளார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளை மதித்திருந்தால், இன்று இத்தகைய அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் பதவியையும் த.வெ.க. அரசையும் புகழ்ந்து கொண்டிருப்பது தற்காலிகமானது என்றும், பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார். தி.மு.க.வுடன் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், மதச்சார்பற்ற கட்சிகள் […]
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘ ஸ்ரீ ஸ்ரீ’

பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ ‘என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ரவி நீலகுடிட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தில் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் […]
‘சி யூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘முதல் நீ முடிவும் நீ’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தருணம்’, ‘ஆரோமலே’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘சி யூ’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்சன் இயக்கத்தில் உருவாகும் ‘சி யூ’ திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அக்ஷயா ஹரிஹரன், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு […]
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர்’

புதுமுக நடிகர் அஷ்ரஃப் கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்டோகிராபர்’ திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் புதிய வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளனர். இயக்குநர் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்டோகிராபர்’ திரைப்படத்தில் அஷ்ரஃப், ஜனனி , ‘ஆடுகளம்’ நரேன், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ‘நிழல்கள்’ ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ரயீஸ் அகமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் […]
பாடகி எஸ். ஜானகி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: கர்நாடக அரசு அறிவிப்பு

மைசூரு: இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல், கானக் குயில் எஸ். ஜானகி (88) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். மைசூருவில் வசித்து வந்த அவர், மாரடைப்பு காரணமாகப் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். இவரது கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, கர்நாடக அரசு அவரது இறுதிச்சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்த உத்தரவிட்டுள்ளது. இன்று மதியம் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, […]
‘கட்டா குஸ்தி 2 ‘ சாதனை; நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பரிசளித்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படம் – இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனையை படைத்திருப்பதால்… மகிழ்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளரான டொக்டர் ஐசரி கே. கணேஷ், விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படம் – கடந்த மூன்றாம் திகதியன்று […]