இந்த வருடத்தில் இதுவரை 68 ஆயிரத்தை கடந்துள்ள டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோய் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகப்படியான […]

ஓடவில்லை.. ஒளியவில்லை.. பதுங்கவில்லை – விஜய்க்கு எ.வ.வேலு பதிலடி

சென்னை: சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய் தன்னை விமர்சித்துத் பேசியதற்கு விமான நிலையத்திலேயே காட்டமான பதிலடியைக் கொடுத்தார். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், உடல்நலக் கோளாறு காரணமாகவே முன்னரே திட்டமிடப்பட்ட சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். தான் சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவை அனைத்தையும் விசாரணை அதிகாரி முன்னிலையில் சமர்ப்பிக்கத் தயார் என்றார். “தி.மு.க.-வினர் […]

திமுக கொண்டுவந்த திட்டங்களை விரிவாக்கம் செய்யும் விரிவாக்க அலுவலர்தான் முதல்வர் விஜய் – ஆ.ராசா விமர்சனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. ஆ.ராசா, முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை ‘திட்ட விரிவாக்க அலுவலர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விஜய், புதிய திட்டங்கள் எதையும் இதுவரை உருவாக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். கவர்ச்சி அரசியல், அநாகரிகமான பேச்சு எனத் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் இருப்பதாகக் கூறிய அவர், காமராஜர் மற்றும் அண்ணா போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் விஜய் அமர்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது […]

அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே முக்கிய காரணம் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கட்சியின் சாதனைகளையும், அரசியல் பலத்தையும் விவரித்துள்ளார். கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் பங்களிப்பு கூட்டணி வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தது என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தாங்கள் அங்கம் வகித்த கூட்டணி கட்சி 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதற்கு பாமகவின் களப்பணியே காரணம் என்று அவர் பெருமையுடன் கூறியுள்ளார். வெற்றி பெற்ற […]

நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கமாக எதிர்கொள்வோம் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு:

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். பொறுப்பேற்க  முடியாது என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை.பொறுப்பில் இருந்தும் விலகவில்லை. எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறைக்கைதிகளின் மனித உரிமையை பாதுகாப்பதை போன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். மனித உரிமைகளில் நிலை அடிப்படையில் வேறுபாடுகள் […]

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து?

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் , சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அசாதாரண சூழல் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவும் துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலே அசாதாரண சூழலை தொடர்ந்து […]

தமிழரசின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் – ஜெயா சரவணன்!

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும் பொது இடத்தில் அமைக்க கூடாது கிழக்கு மண்ணில் சிலை அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்  ஞாயிற்றுக்கிழமை (12) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இனி திமுக தான் போட்டியிடும் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி

சாத்தான்குளம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் இனி வரும் காலங்களில் தி.மு.க. வேட்பாளரே போட்டியிடுவார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் தி.மு.க.-வின் ஆதரவுடன் வெற்றி பெற்று வந்ததாகவும், ஆனால் தற்போது அக்கட்சியின் செயல்பாடுகள் தி.மு.க.-விற்குப் பின்னடைவைத் தருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தற்போது அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக இருப்பவர்கள் மீதும் பல்வேறு ஊழல் […]

உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நாடுகளில் இலங்கை 3ஆம் இடம்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட ‘நம்பியோ’ (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இது தெரியவந்துள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், […]

நாட்டில் பலவீனமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவம்

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) முன்னிலையான போது அந்த குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி போன்ற அனர்த்தங்களின் போது, எதிர்கொள்வதற்குத் தேவையான பணியாளர் திறன் […]