புதுமுக நடிகர் அஷ்ரஃப் கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்டோகிராபர்’ திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் புதிய வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளனர்.
இயக்குநர் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்டோகிராபர்’ திரைப்படத்தில் அஷ்ரஃப், ஜனனி , ‘ஆடுகளம்’ நரேன், கருணாகரன், வேல ராமமூர்த்தி, ‘நிழல்கள்’ ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ரயீஸ் அகமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் வித் மித்தலாஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஏ பி எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் பாசித் சயீத் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போதிய படமாளிகை மற்றும் திரைகள் கிடைக்காத காரணத்தினால்… இத்திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படம் மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.