தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ பாடகி எஸ்.ஜானகி: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழ் அஞ்சலி

இந்திய திரையுலகின் மகத்தான பாடகராக அறியப்படும் எஸ்.ஜானகி, நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மைசூருவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதி சடங்கு மைசூரு நகரை அடுத்துள்ள கனியனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் நடைபெறுகிறது.

அதற்கான பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை கர்நாடக அமைச்சர் யதிந்திரா சித்தராமையா கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மைசூரு நகரை ஒட்டியுள்ள பண்ணை வீட்டில் எஸ்.ஜானகி வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மைசூருவில் நினைவகம்

இதற்கிடையே மைசூருவில் பாடகர் எஸ்.ஜானகி நினைவாக நினைவகம் அமைக்க வேண்டுமென இசையமைப்பாளர் ஹம்சலேகா வேண்டுகோள் வைத்துள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த எஸ்.ஜானகியின் உடலுக்கு பொது மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்தியத் திரையிசை வரலாற்றில் ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அன்போடு அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி நேற்று (ஜூலை 11) காலமானார். அவரது மறைவை அடுத்து, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: ”புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.ஜானகி அம்மாவின் மறைவால் இந்தியா ஒரு இசை சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில் இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார். காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாகத் திகழும். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி: “புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாச்சார உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. இணையற்ற நலினத்துடனும் பன்முகத் தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தியவர் அவர்.

அவரது இனிமையான பாடல்கள் வருங்காலத்திலும் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும். துயரமான இத்தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசை சமூகத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்: ”பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ”தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் பாராட்டிப் புகழப்பட்ட இசைக் குயில் ஜானகி அம்மையார் தன் 88வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மைசூர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி இடியென என்னைத் தாக்கிய நிலையில், நிலைகுலைந்து போய் துயரில் மூழ்கி உள்ளேன்.

கடந்த 50 ஆண்டுகளாக இரவிலும், பகலிலும், பயண நேரங்களிலும், துன்பம் சூழ்ந்த வேளைகளிலும் ஜானகி அம்மையாரின் தேனிசைப் பாடல்கள் எனக்கு அருமருந்தாக உதவின. ஒன்பது வயதிலேயே மேடை ஏறிப் பாடிய ஜானகி, 18 வயதில் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களைப் பாடிய இமாலய சாதனையாளர் ஜானகி அம்மையார். நான்கு தேசிய விருதுகள், ஐந்து தமிழ்நாடு அரசின் விருதுகள், ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசுகளின் விருதுகள் என 33 விருதுகள் இவரைத் தேடி வந்து இசைப் புலமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தது.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் காரு குறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர இசையோடு போட்டி போட்டுக் கொண்டு சிங்கார வேலனே தேவா என்ற பாடல், இளைய ராஜாவின் இசையமைப்பில் அன்னக்கிளியே உன்னைத் தேடுதே என்ற பாடல், இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்ற அவரின் இன்னிசை, பொன்மேனி உருகுதே என்ற அவரின் காந்தக் குரல், மாதா உன் கோியிலில் மணி தீபம் ஏற்றினோம் என்ற அவரின் காந்தக் குரல், தேன் சிந்துதே வானம் என்ற அவரின் இனிய பாடல், டாடி டாடி என்று மழலைக் குரலில் அவர் பாடிய பாடல் என இப்படி நூற்றுக் கணக்கான நம் நெஞ்சம் கவர்ந்த பாடல்களை நம்மால் எவ்வாறு மறக்க இயலும் ?

1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒலித்த ஜானகியின் குரல் 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தது. காதல், தாய்மை, அன்பு, தமிழ் மொழியின் சிறப்பு என பல்வேறு பண்பு நலன்களை வலியுறுத்தும் அவரது பாடல்கள் நெஞ்சம் மறக்காத தேனிசைப் பாடல்கள் ஆகும்.

அவரின் இனிமையான பாடல்கள் காருள்ள வரை, கடல் நீருள்ள வரை, இவ்வையகம் உள்ளவரை நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் எந்நாளும் நம்மோடு வாழ்வார்! அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் பிரிவால் துயரத்தில் மூழ்கி உள்ள குடும்ப உறவுகளுக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்: 1962ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ பாடலைக் கேட்டு இந்திய இசையுலகமே வியப்புடன் திரும்பிப் பார்த்தது. சுப்பையா நாயுடு இசையில் ஆபேரி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற இசைக் கலைஞரான காருக்குறிச்சி அருணாசலம் நாதஸ்வரத்தை இசைத்திருந்தார்.

அந்த நாதஸ்வர இசை சிறப்பானதா அல்லது அதற்கு இணையாக கு.மா.பால சுப்பிரமணியத்தின் தமிழ்ப் பாடல் வரிகளை இசைத்த பாடகியின் குரல் சிறப்பானதா என்று ஒரு பெரும் பட்டிமன்றமே அந்நாளில் நடந்தது. தமிழரின் பழம்பெரும் இசைக் கருவியான நாதஸ்வரத்துக்கு ஒப்பாக தன் குரல் வளத்தை வெளிக்காட்டி மக்களை வசீகரித்த அந்தக் குரல் எஸ்.ஜானகியின் குரல்.

இன்று தன் எண்பத்தியெட்டாம் வயதில் இசைப் பயணத்தை நிறைவு செய்து இயற்கையோடு கலந்திருக்கிறார் எஸ்.ஜானகி. நான்கு முறை சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளை வென்ற எஸ்.ஜானகி, பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும், பத்து முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருதுகளையும் குவித்தவர்.

ஓர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கூட தன்னை வெளிப்படுத்தியிருக்கும் எஸ்.ஜானகி, குழந்தைக் குரலிலும், ஆண் குரலிலும் பாடும் தனித் திறன் பெற்றவர். தென்னிந்திய இசையரசி என்று அழைக்கப்பட்ட அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலைத் துறையினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்: “பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி அம்மையார், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். இந்திய திரை உலகில் இவரது குரல் தனித்துவமானது. இளமை மாறாத இவரது இனிய குரலால் என்றுமே அழியாத பல பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். பல தேசிய விருதுகளை பெற்றவர். இவரது மறைவு இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும், திரைத் துறையினருக்கும், இசை கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி: “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ்.ஜானகி அம்மையார் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ்.ஜானகி அம்மையார் தான். 4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர்.

இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான் பெரிய விருதாக மதித்தவர். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு. இசையரசி எஸ்.ஜானகி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை