விஜயின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம் – முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு

சென்னை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கரூரில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றாமல் ஓடியது யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று கூறிய அவர், விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம் என்று விமர்சித்தார். மு.க. ஸ்டாலின் காட்டிய பெருந்தன்மையை முதலமைச்சர் விஜய் அரசியல் ஆதாயத்திற்காகக் கொச்சைப்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், தி.மு.க. மீது பழிபோடுவதைத் தவெக அரசு […]
பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? – சீமான் கேள்வி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்த தவெக அரசின் நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். அரசு இயந்திரத்தால் செய்ய முடியாத வேலையை ஒரு தனியார் நிறுவனம் செய்துவிடும் என்று நம்புவது தவறு என்று கூறியுள்ள சீமான், இது எதிர்காலத் தலைமுறையின் நலவாழ்வைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் செயல் என்றார். குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவது ஜனநாயகத் துரோகம் என்றும், அர்ஜென்டினா, பொலிவியா போன்ற […]
67,000-ஐக் கடந்த டெங்கு நோயாளிகள்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். […]
மின்சாரம் தாக்கி 31 வயதுடைய நபர் கிளிநொச்சியில் பலி!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதின விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகல்?

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடுவதற்காகவும், உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பொதுச் சபை கூட்டத்திற்கு அழைப்பு […]
நாட்டின் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால் சந்தையில் சிக்கல்கள்?

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட இம்முறை வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் எடுக்கவிருக்கும் தீர்மானம் இதில் மிக […]
தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளமைக்கான அடையாளம் – செம்மணி மனிதப் புதைகுழி

ம. மோகனதாரணி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் செம்மணி மனிதப் புதைகுழி ஒரு சாதாரண குற்றவியல் சம்பவமாக மட்டும் கருதப்பட முடியாது. அது அரச அதிகாரம் இன அரசியல் உள்நாட்டுப் போர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போருக்குப் பிந்தைய நீதியமைப்பின் தோல்வி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அரசியல் அடையாளமாகும். 1948-ல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை ஒரு ஜனநாயக நாடாக மலர்ந்திருக்க வேண்டிய சூழலில் பெரும்பான்மைவாத அரசியலால் பிளவுபட்டது. […]
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஆபிரிக்க நாடுகள் மீது செலுத்தும் ஆதிக்கம் அதிகரிப்பு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் வழங்கும் சலுகைக் கடன்கள், ஆபிரிக்க நாடுகளின் உள்நாட்டுக் கொள்கை முடிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. வணிகக் கடன்களை விடக் குறைந்த வட்டியில் இவை கிடைத்தாலும், இதனுடன் விதிக்கப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்த நிபந்தனைகள் ஆப்பிரிக்க நாடுகளின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. சமீபத்தில் கென்யா பெற்ற 750 மில்லியன் டொலர் உலக வங்கி நிதியுதவி, இந்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இது […]
மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் தீவிரம்

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் குடம்பிகளின் அடர்த்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், அதனால் டெங்கு பரவல் தொடர்பில் அடுத்த 2 வாரங்களும் மிகவும் அபாயகரமானவை என்றும் டெங்கு முகாமைத்துவம் தொடர்பான விசேட நிபுணர் குழுவின் உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘தெரண பிக் ஃபோகஸ்’ (BIG FOCUS) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய டெங்கு பரவலின் அடிப்படையில், இந்த நிலைமை 2017 ஆம் ஆண்டை விடவும் அபாயகரமானதாக அமையக்கூடும் […]
பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ணம் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 30-வது நிமிடத்தில் பாபியன் ரூயிஸ் கோல் அடித்து முன்னிலையை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த பெல்ஜியம் அணியின் சார்ல்ஸ் டி கெட்லேரே, 41-வது நிமிடத்தில் தலையால் ஒரு கோல் அடித்தார். இதனால், 1-1 என்ற சமநிலைக்கு வந்தது. போட்டியின் 2-வது […]