சிலாபம் – கொழும்பு பிரதான வீதி விபத்தில் இளைஞன் பலி; தாய் படுகாயம்!

லாபம் – கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர். 82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி […]
சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய ஆசிய தூதுவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து சிறந்த புரிதலைப் பெறுவதும், குறிப்பாக சுற்றுலாத்துறையில் காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயும் வகையிலும் வெள்ளிக்கிழமை (10) ஆசிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர். மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது தூதுவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பின்னர் தூதுவர்கள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி […]
பிலிப்பைன்சில் நிலச்சரிவு; 15 பேர் உயிரிழப்பு

தீவிரமடைந்து வரும் ‘பாவி’ புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் ‘இண்டாய்’ என்று அழைக்கப்படும் இந்த புயல், நாட்டின் மீது நேரடியாகக் கரையை கடக்காது என்ற போதிலும், அதன் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டனாவோ தீவின் சரங்கனி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் […]
சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அறிக்கை

சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேனவிடம் நேற்று (10) கையளிக்கப்பட்டுள்ளது. கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு முறையான, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட வழிமுறையொன்றை பேணுவதற்காக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையானது நேற்று நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் […]
கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Bandaranaike International Airport) துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று அவசரத் தரையிறக்க நடவடிக்கையை (emergency landing procedure) ஆரம்பித்துள்ளது. விமானம் பறவை மோதலுக்கு (bird strike) உள்ளானதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி: துமிந்தவுக்கு பிணை

தங்க முலாம் பூசப்பட்ட ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கியுடன் முதியவர் ஒருவரைக் கைது செய்த சம்பவத்தில், நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதன் பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை பதில் நீதவான் ரவி மதுகம இன்று (10) உத்தரவிட்டார். வெள்ளவத்தை, ஹவ்லொக் (Havelock) வீட்டுத் தொகுதியில் முதியவர் ஒருவரின் பையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட குறித்த துப்பாக்கியை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிருந்தனர். […]
கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா; அரசியல் அழுத்தம்?

அரசியல் அழுத்தங்களால் நீடிக்க முடியாது எனக் கூறி, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். தலைவர் அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, “2025-03-02 முதல் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நீரோட்டத்திலிருந்தும், உங்கள் அனைவரின் ஆசியுடனும் ஒத்துழைப்புடனும் நான் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன்பிறகு, சங்கத்தின் முன்னேற்றத்திற்காக எனது நேரம், உழைப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பணிப்பாளர் சபை மற்றும் பொது […]
ஆடிப்பிறப்பை பொது விடுமுறை தினமாக்க வேண்டும் – ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்

நாட்டில் ஆடிப்பிறப்பு தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு பிரேரணையை முன்வைத்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, ஆடிப்பிறப்பு தமிழர் மரபு, பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கியமான நாளாகும் என்பதால், அதனை தேசிய ரீதியில் அங்கீகரிக்கும் வகையில் பொது விடுமுறையாக அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும்.மேலும், இத்தகைய நடவடிக்கை இலங்கையின் […]
றிச்மண்ட் ஹில் (Richmond Hill) வர்த்தக மையத்தில் இடம்பெற்ற இரகசிய படப்பிடிப்பு (Voyeurism) சம்பவத்தின் பின்னர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

றிச்மண்ட் ஹில்லில் உள்ள வர்த்தக மையம் (shopping centre) ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய படப்பிடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, றிச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர். வாடிக்கையாளர்களை இரகசியமாகப் படம் பிடித்ததாகக் கூறப்படும் முந்தைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தேகநபரை அங்குள்ள நஷ்டத் தடுப்புப் பணியாளர்கள் (loss prevention staff) அடையாளம் கண்டுகொண்டதை அடுத்து, ஜூன் 9 அன்று ‘யோங் வீதி’ (Yonge […]
மூன்று வருடங்களாக தலைமறைவாக இருந்த கனடிய குற்றவாளி கொலம்பியா உடற்பயிற்சி கூடத்தில் வைத்து கைது

2023 ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த கனடிய குற்றவாளி (fugitive) ஒருவர், கொலம்பியாவின் மெடலின் (Medellín) நகரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த போது, சட்டவிரோதமாக தப்பியோடியதாகக் கூறப்படும் 39 வயதுடைய அரிஃப் ஜுமான் (Arif Jhuman) என்ற நபர், கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலான […]