முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக; கடற்றொழில் அமைச்சரிடம் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை மற்றும் துறைசார்ந்த உரிய அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் உடனடியாக உத்தரவிட்டுள்ளனர். பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்குரிய அலுவலகத்தில் 09.07.2026நேற்று இடம்பெற்ற […]
ஆடிவேல் உற்சவம்; கதிர்காமத்திற்கான காட்டுவழிப் திறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ‘அரோகரா’ கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட […]
மயிலிட்டி மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரிப் போராட்டம்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரக் காணிகள் உடனடியாக மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, #தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினர் இப்போராட்டத்தில் மக்களுடன் இணைந்து தங்களது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட மிகப் பெரிய வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால், இஸ்ரேலும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் அமெரிக்கா – ஈரான் இடையே யுத்தம் நடைபெற்று வந்தது. 100 நாட்களுக்கும் மேலாக […]
சிறைச்சாலை மோதல்; சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரால் தற்போது நடத்தப்பட்டு வரும் அனைத்து விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுமாறு நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் சிறைச்சாலை வளாகம் […]
வடக்கு, கிழக்கு மக்களை பாதிக்கும் பணம் தூயதாக்கல் தடைச் சட்டம்!

பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புகளையும் அந்த அமைப்புகள் மூலம் உதவிகளை பெறும் மக்களையுமே பாதிப்புள்ளாக்கும். இந்த சட்டங்களில் நெகிழ்ச்சித் தன்மையை கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற பணம் தூயதாக்கல் […]
புற்றுநோய் வலி தாங்க முடியாத குடும்பஸ்தர் யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு!

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து […]
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஈரானிய ஷியா முஸ்லிம்களின் மிக புனிதமான தலங்களில் ஒன்றான மஷ்ஹத் (Mashhad) நகரில் அமைந்துள்ள இமாம் ரெஸா (Imam Reza) தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடான ஈராக்கின் பல நகரங்களில் ஆறு நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி மத வழிபாடுகளைத் தொடர்ந்து இந்த உடல் அடக்கம் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த […]
இலங்கையின் சிறைச்சாலை இரத்தக் களரி: மரணத்திற்கு முன்னர் அரங்கேறிய கொடூர சித்திரவதைகளை அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களின் போது கொல்லப்பட்ட சிறைக்கைதிகள், விதிவிலக்கற்ற முறையில் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு மருத்துவமனையில் ஐந்து பேர் கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளில், பாதிக்கப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் “கட்டுவெல்லேகம […]
மாணவியை தாக்கிய ஆசிரியை!

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கு குறித்த மாணவி தவறாக பதில் கூறியமையினால் கோபமடைந்த ஆசிரியர் சிறுமியை கன்னத்தில் பலமாக அறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சிறுமி தவறான பதிலளித்ததாகவும் இதனால் […]