புதிய சுற்றறிக்கை; பல்கலை விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்குப் பாரிய அநீதி?

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றறிக்கையினால், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வுகள் வழங்கப்படாத காரணத்தினால், வரவிருக்கும் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுவது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி ஏற்படும் என்று அந்தச் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் […]
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமது கடமையையும், பொறுப்பையும் அவர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்தே, இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் […]
டெங்கு சுற்றிவளைப்பு

களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகுவதாகக் கண்டறியப்பட்ட பின்வத்தை, வாதுவை மற்றும் மொல்லிகொட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, இன்று (10) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வாதுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் ட்ரோன் பிரிவுக்குச் சொந்தமான ட்ரோன் கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன்போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சாதாரண முறையில் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்கள் மற்றும் கூரைகளின் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; சலேக்கு ஆதரவான இடைக்கால மனுக்கள் ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு ஆதரவு தெரிவித்து சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து இடைக்கால மனுக்களையும் வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், தேசப்பற்றுள்ள […]
வளைகுடா நாடுகளின் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கு சிரியா ஊடாக மாற்று வழித்தடம் – பிரான்ஸ்

ஹோர்முஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மாற்றாக, வளைகுடா நாடுகளின் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கு சிரியாவை ஒரு மாற்று வழித்தடமாகப் பயன்படுத்துவது குறித்து பிரான்ஸ் பரிசீலித்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா – ஈரான் இடையிலான அண்மைய தாக்குதல்கள் உலக எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் தெரிவித்துள்ளார். TF1-க்கு அளித்த பேட்டியில், உலகச் சந்தைகளுக்கு தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த பன்முகப்படுத்தப்பட்ட புதிய எரிசக்தி வழித்தடங்கள் அவசியம் என […]
அமெரிக்காவில் டைனோசர் எலும்புக்கூடு: ரூ. 250 கோடிக்கு ஏலம்

அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வமான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று, கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரி கஸ் லிக்கிங் (Cary Gus Licking) என்பவரைக் கௌரவிக்கும் விதமாக, இந்த டைனோசருக்கு ‘கஸ் டி-ரெக்ஸ்’ (Gus T-Rex) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் உள்ள ஹார்டிங் கவுண்டியில், கேரி கஸ் லிக்கிங்கிற்குச் சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ‘ஹெல் க்ரீக்’ (Hell Creek) பாறை அடுக்குகளின் வரலாறு மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். […]
வெளி இடங்களிலிருந்து யாழ் நகர் பகுதியில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாகவடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் கூறுகையில் – சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் […]
திருமாவளவன் குறித்து பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன் | மனம் மாறிய வைகோ

தென்காசி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து தான் பேசிய கருத்துகளைத் திரும்பப் பெறுவதாகத் தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார். திருமாவளவனின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும், அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகவும் வைகோ கூறியுள்ளார். தி.மு.க.-வின் அரசியல் மோசடிகள் குறித்துப் பேசிய அவர், த.வெ.க. அரசுக்கு மதிமுக தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்று உறுதி அளித்தார். ஜனநாயகத்தைப் பற்றிப் பேச தி.மு.க.-விற்கு தகுதியில்லை என்றும், அண்ணாவின் கொள்கைகளை அவர்கள் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் […]
நல்லூர் தேர்த் திருவிழா காலத்தில் வடக்குக்கு விசேட புகையிரத சேவை அமுல்படுத்தப்படும் – பிமல் ரத்நாயக்க

நல்லூர் தேர்த் திருவிழா காலத்தில் வடக்குக்கு விசேட புகையிரத சேவை அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவர், நல்லூர் தேர்த் திருவிழாவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் செல்லவேண்டும். அது முக்கியமானதொரு தலம் என்றும் இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போது கூறியுள்ளார்.
நாட்டில் டெங்கு அச்சுறுத்தல்: பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை மூட கோரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், நோய் பாதிப்பு அதிகம் உள்ள வலயங்களில் அமைந்துள்ள அரச, அரை அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களை ஆகக்குறைந்தது இரு வாரங்களுக்கு மூடி, குறித்த வளாகங்களைச் சுத்தப்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். தற்போது மேல் மாகாணம் […]