நெடுந்தீவு அபிவிருத்திக்கு 2,000 மில்லியன் ரூபா: புதிய திட்டங்களுக்கு அமைச்சர்கள் அடிக்கல்!

நெடுந்தீவு பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளுக்காக தற்போதைய அரசாங்கத்தினால் 1,500 மில்லியன் முதல் 2,000 மில்லியன் ரூபா வரையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேட அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவையாக இருந்த எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வாக, புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று […]

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதல் மற்றும் கைதிகளின் தொடர் போராட்டங்களை அடுத்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதற்கென விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இரகசியமாக இயங்கி வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்று அம்பலமானதே இந்த வன்முறைக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல பாதாள உலகக் குழம்பல் தலைவரான “பூரு மூனா” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ‘சுரேஷ்’ எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரே சிறைச்சாலையின் இரு கைதிகள் குழுக்களுக்கு […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது சிறைச்சாலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளனர்.

சிறைச்சாலைக் கைதிகள் மோதல்: விசாரணைகளுக்காக விசேட குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோதலில் சிக்கி இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு […]

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவனால் கரும்புலிகளின் அன்னையருக்கு மதிப்பளிப்பு

கரும்புலிகள் தினமான நேற்றைய தினம் (ஜுலை 05) ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது. தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த கரும்புலிக் கப்டன் மில்லர் அவர்களின் தாயார் மற்றும் கடற்கரும்புலிக் கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது தாயார் ஆகியோர் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவனால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடியிலுள்ள இராணுவ முகாம் […]

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகாலச் சமூகமும் போராளிகளின் வகிபாகமும் நிகழ்வு

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகாலச் சமூகமும் போராளிகளின் வகிபாகமும் எனும் தலைப்பில் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. இதன்போது வரலாற்றின் வேர்கள் விருது வழங்குமை நிகழ்வும் இடம்பெற்றிருந்ததோடு போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பானகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் உரைகளும் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை உட்பட பல்வேறுபட்ட சமூக அமைப்புகளின் […]

பிராம்ப்டனில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி – இரு சந்தேக நபர்களைத் தேடும் பொலிஸார்

பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏர்ல்ஸ்பிரிட்ஜ் புலிவர்ட் (Earlsbridge Boulevard) மற்றும் ஈடன்புரூக் ஹில் டிரைவ் (Edenbrook Hill Drive) ஆகிய பகுதிகளுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, பிற்பகல் 3:38 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகப் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் சூட்டுக் காயங்களுடன் வயது வந்த ஆண் ஒருவரைக் கண்டறிந்ததாகப் பொலிஸ் […]

கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு: ரொறன்ரோ நபரைத் தேடும் பொலிஸார்

தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுத்தமை குறித்த விசாரணைக்காகத் தேடப்பட்டு வரும் 29 வயதுடைய நபர் ஒருவரைக் கண்டறிவதற்கு ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். ஜூலை 3ஆம் திகதி இரவு 11:20 மணியளவில், செயின்ட் கிளෙயர் அவென்யூ வெஸ்ட் (St. Clair Avenue West) மற்றும் டஃபெரின் வீதி (Dufferin Street) சந்திப்புப் பகுதிக்கு அருகில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். சந்தேக நபர் தர்க்கம் ஒன்றின் போது, பாதிக்கப்பட்ட நபரைக் கொடூரமாகத் தாக்கியதுடன், […]

ஸ்கார்பரோ வீதித் திருவிழாவில் பதின்ம வயது இளைஞன் மீது கத்திக்குத்து: 16 வயது சிறுவர்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

டேஸ்ட் ஆஃப் லாரன்ஸ்’ (Taste of Lawrence) வீதித் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் 17 வயது இளைஞன் ஒருவன் கத்திகுத்துக்கு இலக்கான சம்பவத் தொடர்பில், 16 வயதுடைய இரு சிறுவர்கள் மீது ரொறன்ரோ பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில், லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Lawrence Avenue East) மற்றும் பேர்ச்மவுண்ட் வீதி (Birchmount Road) ஆகிய பகுதிகள் சந்திக்கும் இடத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 10 […]

உலகளாவிய ரீதியில் எல் நினோ நிலைமை மேலும் தீவிரமடையும்

உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது உச்சக் கட்ட நிலையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் […]