பலாலி சந்தியில் உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கக் கோரிப் போராட்டம்

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை மீள வழங்குமாறு வலியுறுத்தினர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெய்யிலில் இருந்து தம்மை பாதுகாக்க அப்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைக்க முற்பட்ட போது பலாலி பொலிஸார் அதற்கு தடைவிதித்ததுடன், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை வழமைக்குத் திரும்பியது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

7-வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலியா சாதனை!

கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord’s) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர். இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அவர்கள், தங்களுக்கு சவாலளிக்க வேறு எந்தவொரு அணியும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளனர். நேற்று நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து […]