பசில் ராஜபக்ச இலங்கை வருகிறார்? – முன்னாள் ஜனாதிபதி மகிந்த கருத்து

தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று முன்தினம் (04.07.2026) வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது எதிர்வரும் நாட்களில் தன்னுடைய அரசியல் நகர்வுகள் குறித்தும் அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு […]
காணாமல்போன பௌத்தத் துறவி எலும்புக்கூடாக மீட்பு?

ணாமல் போன பௌத்த துறவியொருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடொன்று பொதுமக்களின் தகவலின் பேரில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகக் காணாமல் போயிருந்தவரும், தெபரகல ஆரண்ய சேனாசனத்தில் வசித்து வந்தவருமான பம்பரகல அபயவன்ச தேரருடையது என சந்தேகிக்கப்படும் எலும்புகள், சேனாசனத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேனாசன இடத்திலிருந்து சுமார் 02 கிலோமீட்டர் தொலைவில் அவை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேன் சேகரிப்பதற்காகக் காட்டிற்குச் சென்ற ஒரு குழுவினரால் இந்த எலும்புகள் முதலில் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் […]
ஆகஸ்ட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சிறைத்தண்டனைக்கு எதிரான மனு விசாரணை

கடந்த 2015ஆம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, சட்டவிரோதமாக சிறைபிடித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) திங்கட்கிழமை நிர்ணயித்துள்ளது. அதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை எதிர்வரும் […]
பிறந்தநாள் நிகழ்வு கொலைச் சம்பவம்; பிரதான சந்தேகநபர் கைது!

கடவத்தை – இஹல பியன்வில பகுதியில் பிறந்தநாள் நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில், 54 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் தனது சகோதரனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, இரண்டு நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் அங்கிருந்தவர்கள் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் நிகர நஷ்டம் ரூ. 23.2 பில்லியனாக அதிகரிப்பு

2025/2026 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 23.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட இறுதி நிதிநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025/2026 நிதியாண்டில், அதிகரித்த எரிபொருள் செலவுகள், விமான நிலையம், பயணிகள் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக இயக்க செலவுகள் ரூ. 307.1 பில்லியனாக அதிகரித்துள்ளன. ஜெட் எரிபொருள் செலவுகள் ரூ. 91.7 பில்லியனிலிருந்து ரூ. 96.1 பில்லியனாக அதிகரித்துள்ளன. கடன் சேவைப் […]
மேகதாது அணை குறித்து தூண்டிவிடுவதே மோடி சர்க்கார் தான் – வைகோ விமர்சனம்

கோயம்புத்தூர்: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடினார். கர்நாடகாவைத் தூண்டி விட்டுத் தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அன்புமணி ராமதாஸின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அவர் கோரினார். மேலும், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வெளிப்படுத்திய வைகோ, தவெக அரசு […]
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு: மூன்று சிறை அதிகாரிகளும் பலி

: நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் நான்கு கைதிகளும் அடங்குவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நிலவிய வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுமார் 73 பேர் காயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் புஷ்பா கம்லத் தெரிவித்துள்ளார். நேற்று சிறைச்சாலையினுள் வெடித்த வன்முறை மோதல்களின் போது இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன், மேலும் 38 பேர் […]
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு; 25 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை மற்றும் பதற்ற நிலைமைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்திய விபரங்களின்படி, இந்த புதிய மோதல் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை காயமடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரையும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, பொலிஸார் பலமுறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் தீவிர பதற்றம்: 12 பொலிஸார் காயம்; நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மோதலை தொடர்ந்து, இன்றும் அங்கு அசாதாரணமான மற்றும் பதற்றமான சூழல் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தச் சென்ற 12 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். வான்நோக்கி துப்பாக்கிச் சூடு: சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கட்டுக்கடங்காத நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் […]
கீரிமலை குசுமண்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் இன்று(6) காலை இடம் பெற்றுள்ளது. கடல் தொழில் அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த முதியவரின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.