போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகாலச் சமூகமும் போராளிகளின் வகிபாகமும் எனும் தலைப்பில் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
இதன்போது வரலாற்றின் வேர்கள் விருது வழங்குமை நிகழ்வும் இடம்பெற்றிருந்ததோடு போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பானகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் உரைகளும் இடம் பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை உட்பட பல்வேறுபட்ட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
