வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த எண்களை தபால் மூலம் பயனாளர்களுக்கு அனுப்பாததால், பல தனிநபர்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் […]
மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்தமையினால் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொந்தமான இப்பாலம் கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த பாலம் இடிந்துவீழ்ந்த சம்பவம் […]
திமுகவை தீயசக்தி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர் – மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தவெக பதிலடி

‘சென்னை: தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் தளத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. எம்.ஜி.ஆர். தி.மு.க.-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதையும், கலைஞரின் மீதான அவரது மரியாதையையும் சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக, எம்.ஜி.ஆர். கடைசிவரை தி.மு.க.-வை ஒரு தீயசக்தியாகவே பார்த்தார் என்று வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளது. தி.மு.க.-வின் அரசியல் பயணத்தை எம்.ஜி.ஆர். எவ்வாறு எதிர்த்தார் என்பதை ஸ்டாலின் ஏன் மறைக்கிறார் என்று […]
வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து வடக்கு ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்துக்கு முன்னிருந்து மன்னார் வீதி வழியாக சென்று, காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நின்று பல்வேறு கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோசங்களை எழுப்பியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகர சபை மேயர் […]
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

‘சென்னை: கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்தச் சம்பவம் அ.தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே 6 தொகுதிகள் காலியாக உள்ள சூழலில், தற்போது கரூரும் காலியாகும் சூழல் உருவானதால், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி […]
மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி : 10 வயது மகள் மாயம்!

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு குறித்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காக துபார வாவிக்குச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி […]
சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு நேற்று (28) விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அந்த செய்தி நிறுவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலையும் […]
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் திடீர் ஓய்வு முடிவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடக்கும் போட்டியுடன் அவரது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் […]
எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் – ஆனந்த விஜேபால

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைளில் தற்போது நெத்தலிகளுடன் சுறாக்களும் அகப்படுகின்றன.அரசியல் ஆசிர்வாதத்துடன் தான் போதைப்பொருள் வர்த்தகமும்,பாதாளக்குழுக்களும் எழுச்சிப் பெற்றன. எதிர்வரும் காலப்பகுதியில் பிரதான தரப்பினர் பலர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 54இ000 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டின் […]
இன, மத பிளவுகளின் காலம் முடிந்தது; ஒற்றுமை சமூகத்தை கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்பு – விஜித ஹேரத்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது. அதில் பிரதம […]