அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்!

அனலைத்தீவு மக்களின் சுகாதாரத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (28/06) அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வைத்தியசாலையின் மருந்து விநியோகம், மருத்துவ உபகரணங்கள், மனித வளம், அவசர சிகிச்சை வசதிகள், தாய்-சேய் நல சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, அனலைத்தீவில் […]

ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

2022இல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் என கூறி ரஷ்யா இந்த போரை தொடங்கியது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷ்யாவுக்கு வட கொரியா,சீனா ஆகிய நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன. அவ்வப்போது ரஷ்யா – உக்ரைன் உட்கட்டமைப்புகளை குறிவைத்து பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக உக்ரைனின் நீண்ட […]

குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் காலை சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் 63 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், அம்பாறை மாவட்ட […]

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது! ; நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளது. இப்போது, இன்னும் இரண்டு புதைகுழிகள் உள்ளன எனும் கருத்தை கூறுகின்றார். இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்  மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் […]

8 சதவீதம் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.22 ரூபாயாகவும், விற்பனை விலை 341.87 ரூபாயாகவும் காணப்பட்டது. இலங்கை ரூபாயின் தற்போதைய பெறுமதி வீழ்ச்சியானது, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த […]

ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களுள் ஒரு பெண்ணும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து […]

மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (29) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். […]

விஜய் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி? ஜூலை 1-இல் ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு

‘சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக-வின் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. ஆதரவு கட்சிகளுடன் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு வலுவான அரசியல் அணியை உருவாக்கத் தவெக திட்டமிட்டுள்ளது. தவெக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, வி.சி.க. தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது, கூட்டணியை […]

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம், டெங்கு நோயாளிகள் சம்பந்தமான பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையமாக உத்தியோகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மருத்துவமனை வரலாற்றில் உலக சுகாதார அமைப்பின் இத்தகைய உயரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது மருத்துவமனையாக அங்கொடை தொற்று நோய்கள் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை முன்னிட்டு, தேசிய […]

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பிலுள்ள அமெரிக்கன் சிலோன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம், மட்டக்களப்பு கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களின் ஒன்றியத் தலைவரும் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் […]